நாய் கறி விவகாரம் - சில சந்தேகங்கள்

நாய் கறி விவகாரம் - சில சந்தேகங்கள்

     சில தினங்களுக்கு முன் நவம்பர் 17ந் தேதி,  சென்னை சென்ரல் ரயில் நிலையத்தில், ஜோத்பூரிலிருந்து  சென்னை எழும்பூருக்கு சுமார் 2,100 கிலோவிற்கு அதிகமான இறைச்சி  அனுப்பி வைக்கப்பட்டது.  மேற்படி இறைச்சி கெட்டு விட்டதின் காரணமாகவும், பார்சலை எடுக்க எவரும் வராத காரணத்தாலும்,  ரயில்வே போலீஸ் விசாரணையில் ஈடுபட்ட போது, பல்வேறு செய்திகள் வெளி வர துவங்கின.  முதலில் இது நாய் இறைச்சி என கூறப்பட்டது.    பின்னர் ஆட்டிறைச்சி என்றும் செய்திகள் உலா வர துவங்கின.  

உணவு பாதுகாப்பு அதிகாரிகளும், மாநகராட்சி அதிகாரிகளும் வந்து இதை நாய்கறி என்றனர். இதற்கிடையில் என்ன மாயம் நடந்ததோ தெரியவில்லை,  இது நாய் கறி கிடையாது, ஆட்டுக்கறி என செய்தி பரப்பட்டது.  ரயில்நிலைய காவல் துறையினர் முதலில் தெரிவித்த செய்தி,  இது என்ன இறைச்சி என்பதை தமிழ்நாடு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தான் கூற வேண்டும் என்றார்கள்.   


    சென்னையில் நாய் கறி பிரியாணிக்கு போடுவது புதிதான ஒன்றல்ல.  2011-லேயே சென்னையில் உள்ள அசைவ உணவகத்தில் பூனைக் கறி கலப்பதாக புகார் ஏற்பட்டதை அடுத்து, தமிழக அரசு பூனைக்கறி விற்பர்களை பிடிக்க ஒரு தனிப்படை அமைத்தது.  இது சம்பந்தமாக ஒரு தகவல் வெளியானது, சென்னையில் மயிலாப்பூர், அண்ணாநகர், கோட்டூர்புரம், ராயப்பேட்டை போன்ற இடங்களில் தெருவில் திரியும் பூனைகள்,  வீடுகளில் உள்ள பூனைகள் திடீரென காணாமல் போனதாக. இது சந்தேகத்தை கிளப்பியது. ஆனால் இது வரை இது பற்றிய முழுமையான தகவல்கள் வெளியாகவில்லை.  பொது மக்களை திருப்தி படுத்தும் வகையில், காவல் துறையினர் செங்குன்றம், பல்லாவரம் உள்ள பகுதியில் உள்ள ஹோட்டல்களில் பூனை கறி கலந்த பிரியாணி விற்கப்படுவது கண்டு பிடிக்கப்பட்டு, கைது செய்து வழக்கும் தொடுத்தார்கள்.  ஒரு திரைப்படத்தில், காமெடி நடிகர் விவேக் பேசியது தான் தற்போது நினைவுக்கு வருகிறது,  பாதையோற கடையில் ரூ 5க்கு விற்கப்படும் பிரியாணியை தின்று விட்டு காக்கா போல் கரைவார்.  இது என்ன பிரியாணி என கேட்கும்  போது, அருகில் உள்ளவர் கூறுவார்,"ரூ 5க்கு காக்கா பிரியாணி  கொடுக்காமல், சிக்கன் பிரியாணியா கொடுப்பார்கள்" என்று.  இது உண்மையாகும் வகையில் நாய் கறி கைப்பற்றப்பட்டுள்ளது.

     கைப்பற்றப்பட்டது நாய் இறைச்சியல்ல, ஆட்டு இறைச்சி எனவும் அது எங்களுக்கு சொந்தமானது என்றும் கூறி ஷகிலா பானு என்ற பெண் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.  ரயில் நிலையத்திற்கு வந்த இரண்டு தினங்கள் வரை ஏன் வரவில்லை என்பதற்கு விளக்கம் கொடுக்கவில்லை.  புரியாத ஒரு புதிர் தொடர்ந்து ஊடகங்களில் வெளிவருகிறது.  ஜோத்ப்பூரிலிருந்து அனுப்பியவர்கள் யார் என்பது தெரியவில்லை என்றால், உரிய சரக்குக்கு உரிமை கொண்டாடும் ஷகிலா பானு யார் அனுப்பியது என்பதை தெரிவித்திருந்தால்,  ரயில்வே காவலர் ஜோத்ப்பூர் செல்ல வேண்டிய அவசியம் கிடையாது.   ஷகிலா பானு தெரிவிக்கவில்லையா என்பதையும் பொதுமக்களிடம் பொறுப்பான அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும்.

     ரயில்வே காவல் துறையினர் ஒரு செய்தியை கூறினார்கள்.  ரயிலில் வரும் இறைச்சியை தமிழக உணவு பாதுகாப்பு அமைப்பு சோதனை செய்து, உண்ண தக்கதா என்பதை முடிவு செய்த பின்னர்தான் வெளியே எடுத்துப் போக அனுமதிக்கப்படும் என்றால், இரண்டு நாளாக உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டும் வரவில்லையா அல்லது தகவலே கொடுக்கவில்லையா என்ற கேள்வியும் எழுகிறது.  இதையும் தெளிவுப்படுத்த வேண்டி பொறுப்பு காவல் துறைக்கு உள்ளது.  மீன் என்று புக்கிங் செய்யப்பட்டுள்ளது.  எத்தனை ஆண்டுகாலமாக இந்த மோசடி நடந்து வந்துள்ளது என்பதையும் கண்டு பிடிக்க வேண்டிய பொறுப்பு மாநில அரசுக்கு உள்ளது. 

சமீபகாலங்களில் தெருவுக்கு தெரு பிரியாணி கடைகள் புற்றீசல்கள் போல் பெருகி விட்டன. இவை அனைத்தும் பெரும்பாலும் இஸ்லாமியர்களாலேயே நடத்தப்படுகின்றன. ஆனால், வாடிக்கையாளர்களோ எல்லா மதத்தினராகவும் இருக்கின்றனர். ஆட்டு இறைச்சி போட்டு பிரியாணி செய்தால் விற்கவே முடியாத நம்ப முடியாத குறைந்த விலையில் விற்கின்றனர். அது மட்டுமல்லாமல் சுவைக்காக பலவிதமான ரசாயன பொருட்களும் கலக்கப்படுவதாக தகவல்கள் வருகின்றன.  எனவே, அந்த கடைகளில் சாப்பிடுபவர்கள் அந்த கடையின் பிரியாணிக்கு விரைவில் அடிமையாகி விடுகின்றனர்.

 இவற்றை எல்லாம் வைத்துப்பார்க்கும் போது லவ் ஜிகாத் போல இது உணவு ஜிகாத்தா? என்ற சந்தேகம் எழுகிறது.விசாரணை நல்ல முறையில் சென்றால் தான் இந்த விஷயங்களில் எவ்வளவு உண்மை என்பது தெரியவரும்.

-ஈரோடு சரவணன்