நாளை அனுமத் ஜெயந்தி

நாளை அனுமத் ஜெயந்தி

ஸ்ரீ ராம பக்தரும் சிரஞ்ஜீவியானவருமான ஸ்ரீஆஞ்சநேயரின் அவதார தினமான மார்கழி மாத மூல நக்ஷத்திரம் நாளை வருகிறது. இதனையொட்டி கோவில்களில் ஸ்ரீஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடத்த ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளன. தமிழ்நாட்டில், நாமக்கல், நங்கநல்லூர், சோளிங்கர், இடுக்கண் பாளையம் ஆகிய இடங்கள் புகழ் பெற்ற ஆஞ்சநேயர் தளங்களில் சிலவாகும்.

ஈரோடு வ.உ.சி பூங்காவில் உள்ள ஸ்ரீ.மகாவீர ஆஞ்சநேயர் கோவிலில் வழிபாட்டு குழுவினர் அனுமத் ஜெயந்தி விழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.இதில் விழாவிற்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவதற்கு 75,000 லட்டுகளை விழா ஏற்பாட்டாளர்கள் தயாரித்துள்ளனர். இந்த பணியில் சுமார் 60 பக்தர்கள் ஈடுபட்டுள்ளனர்.

எல்லாம் வல்ல ஸ்ரீ. அனுமனை வணங்கி வீரம், ஞானம், மனோதிடம், ஆரோக்கியம், பக்தி, விநயம் முதலிய நற்பண்புகள் கிடைக்கப்பெறுவோமாக. வாசகர்கள் அனைவருக்கும் அனுமத் ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்.