நாளை துவங்குகிறது நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர்

நாளை துவங்குகிறது நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர்

2018ம் ஆண்டின் நாடாளுமன்ற  குளிர்கால கூட்டத்தொடர்  நாளை துவங்குகிறது.  சுமார்  20 கூட்டங்களை கொண்ட இந்த கூட்டத்தொடரில் மாநிலங்களவையில்   8 மசோதாக்களும்  மக்களவையில் 15 மசோதாக்களும் தாக்கல் செய்யப்பட உள்ளன. 2019ம் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் நடைபெறும் கடைசி கூட்டத்தொடர் என்பதால் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. இந்த கூட்டத்தொடரில் ரபேல் விமான விவகாரம், சிபிஐ அதிகாரிகள் விவகாரம் ஆகியவற்றை எழுப்ப எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

இந்த கூட்டத்தொடரில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் சுமூகமாக நடைபெறுவதை குறித்து ஆலோசிக்க மாநிலங்களைவை சபாநாயகரும் துணை ஜனாதிபதியுமான வெங்கைய நாயுடுவும், மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜனும் தனித்தனியாக அனைத்து கட்சி கூட்டத்தை இன்று கூட்டியுள்ளனர்.