நாளை முதல் மகாலஷ்மி யாகம்

நாளை முதல் மகாலஷ்மி யாகம்

இந்து முன்னணி திருப்பூர் மாவட்டம் பொங்கலூரில் ஷோடஸமகாலக்ஷ்மி யாகம் மற்றும் பல ஆன்மீக நிகழ்ச்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது. 

இந்துமுன்னணி  சார்பாக  திருப்பூர் மாவட்டம் பொங்கலூரில்  டிசம்பர் 23,24,25 ஆகிய தேதிகளில் 

கஜபூஜை,
108அஸ்வ (குதிரை)பூஜை, 
1008கோபூஜை,
மீனாட்சிதிருக்கல்யாணம்,
ஆண்டாள்திருக்கல்யாணம் ஆகிய  ஆன்மீக வைபவங்கள் நடைபெற உள்ளன.

இந்த மூன்று நாள் பெருவிழாவின் முத்தாய்பாக மகாலட்சுமியின் 16 அம்சங்கள் மற்றும்  மகாவிஷ்ணுவிற்கான சோடஷமஹாலட்சுமி மஹாயாகம் 24 அன்று துவங்கி 25 வரை  இரண்டுநாட்கள் தொடர் யாகமாக நடைபெறவுள்ளது.

இதற்காக  360 அடி நீளம் 60 அடி அகலம் 4 அடி உயரத்தில் பிரம்மாண்டமான யாக குண்ட மேடை தயாராகிறது.  இதில் 17 பிரம்மாண்ட ஹோம குண்டங்கள் நிர்மாணிக்கப்படுகின்றன.  வரலாற்றில் இதுவரை நடைபெற்றிராத இந்த யாகத்தில் பங்கு கொள்வது மிகப்பெரும் புண்ணியம்.

மூன்று நாட்கள் தொடர்ந்து நடைபெறும் வரலாற்று சிறப்புமிக்க இந்த ஆன்மீக வைபவத்தில் அனைவரும் தங்கள்  குடும்பத்துடன் கலந்து கொண்டு மஹாலட்சுமியின் பரிபூர்ண அருள் பெறும்படி  இந்து முன்னணி  கேட்டுக்கொள்கிறது.