நாளை முதல் வெள்ளித்திரையில்

நாளை முதல் வெள்ளித்திரையில்

நாளை தமிழ் திரைப்பட ரசிகர்களுக்கு கொண்டாட்டமான நாள். ரஜினிகாந்த் நடித்துள்ள 'பேட்ட' திரைப்படமும் அஜீத்குமார் நடித்துள்ள 'விஸ்வாசம்' திரைப்படமும் நாளை வெளியாகின்றன. இதனால், ரஜினிகாந்த் ரசிகர்களும் அஜீத்குமார் ரசிகர்களும் உற்சாகமடைந்துள்ளனர். டிக்கெட் முன்பதிவுகளையும் துவக்கி விட்டனர். தங்கள் அபிமான நாயகனின் படத்தை ஆர்வத்துடன் எதிர்ப்பார்க்கும் அவர்கள் அதை டிவிட்டரிலும் டிறேண்டிங் ஆக்கி வருகின்றன.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கி சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள படம் 'பேட்ட' இதில் ரஜினிகாந்துடன் சிம்ரன், த்ரிஷா, விஜய் சேதுபதி ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் ரவிசந்தர் இசையமைத்துள்ளார்.

சிவாவுடன் நான்காவது முறையாக அஜீத்குமார் கூட்டணி அமைத்திருக்கும் 'விஸ்வாசம்' படத்தின் நாயகியாக நயன்தாரா நடித்துள்ளார். சத்திய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.