நியூசிலாந்தின் முதல் வெற்றி

நியூசிலாந்தின் முதல் வெற்றி

இந்திய நியூசிலாந்து அணிகளுக்கிடையே இன்று நடைபெற்ற நான்காவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 30.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 92 ரன்கள் மட்டுமே எடுத்தது. 93 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடத்துவங்கிய நியூசிலாந்து அணி 14.4 ஓவர்களிலேயே 2 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. 

எனினும், இந்தியா 3 போட்டிகளில் வெற்றி பெற்று ஏற்கனவே தொடரை கைப்பற்றிவிட்டது இங்கு குறிப்பிடதக்கது.