நியூசிலாந்திலும் தொடர் வெற்றி

நியூசிலாந்திலும் தொடர் வெற்றி

நியூசிலாந்திற்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் போட்டியிலும் வெற்றி பெற்றதனால் 3-0 என்ற கணக்கில் அசத்தலாக தொடரை கைப்பற்றியுள்ளது இந்திய அணி. இன்று நடைபெற்ற மூன்றாவது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 244 என்ற இலக்கை நிர்ணயித்தது. இந்திய அணி வெறும் மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 43 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை எட்டியது. அதிகபட்சமாக ரோஹித் 62 ரன்களும் கோலி 60 ரன்களும் எடுத்தனர்.