நீரவ் மோடி பங்களா நாளை குண்டு வைத்து தகர்ப்பு

நீரவ் மோடி பங்களா நாளை குண்டு வைத்து தகர்ப்பு

அலிபாக், மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் பெற்று, அதை திருப்பி செலுத்தாமல் வெளிநாடு தப்பிச் சென்ற, வைர வியாபாரி நீரவ் மோடிக்கு, மகாராஷ்டிரா அலிபாக்கில், கடற்கரையோர சொகுசு பங்களா உள்ளது. இது, 100 கோடி ரூபாய் மதிப்பு உடையது. இந்த பங்களா, கடலோர கட்டுப்பாடு விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளதால், அதை இடிக்க உத்தரவிடப்பட்டது. கட்டடம் மிகவும் உறுதியாக இருப்பதால் அதை இடிப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த பங்களா,குண்டு வைத்து, நாளை தகர்க்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.