நீரவ் மோடி லண்டனில் கைது

நீரவ் மோடி லண்டனில் கைது

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடி கடன் மோசடி செய்துவிட்டு பிரிட்டனுக்கு தப்பியோடிய தொழிலதிபர் நீரவ் மோடிக்கு (48) எதிராக லண்டன் நீதிமன்றம் கைது ஆணை பிறப்பித்தது.  

அவரை நாடு கடத்தி இந்தியாவுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று அமலாக்கத் துறை விடுத்த கோரிக்கையை ஏற்று லண்டன் நீதிமன்றம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்நிலையில், நீரவ் மோடி லண்டனில் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.