'நெல்' -  ஜெயராமன் காலமானார்

'நெல்' - ஜெயராமன் காலமானார்

பாரம்பரிய நெல் பாதுகாவலரான 'நெல் ஜெயராமன்' இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 50. 

நூற்றுக்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் வகைகளை  மீட்டெடுத்து அவற்றை மக்களிடையே கொண்டு சென்றவர் ஜெயராமன். எனவே இவர் 'நெல்'  ஜெயராமன் என்று அழைக்கப்பட்டார். இயற்கை விவசாயி நம்மாழ்வாரிடம் பயின்ற இவர் திருவாரூர் மாவட்டம், கட்டிமேடு கிராமத்தை சேர்ந்தவர்.

திருவாரூர் மாவட்டம் ஆதிரங்கத்தில் ஆண்டு தோறும் பாரம்பரிய நெல் திருவிழா நடத்தி பாரம்பரிய நெல் வகைகளை விவசாயிகளிடமும், நுகர்வோரிடமும் பரப்பி வந்தார். மத்திய அரசின் அறிவியல் தொழிற்நுட்ப அமைச்சகத்தின்  "ஸ்ருஷ்டி சம்மான்" விருது தமிழக அரசின் "சிறந்த இயற்கை விவசாயி" விருது உட்பட பல விருதுகளை பெற்றுள்ள 'நெல்' ஜெயராமனின் மறைவிற்கு அரசியல் தலைவர்களும், முக்கிய பிரபலங்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.