நேஷனல் ஹெரால்டு நிறுவனத்துக்கு - மத்திய அரசு நோட்டீஸ்

நேஷனல் ஹெரால்டு நிறுவனத்துக்கு - மத்திய அரசு நோட்டீஸ்

தில்லி ஐடிஓ பகுதியிலுள்ள கட்டடத்திலிருந்து "நேஷனல் ஹெரால்டு' நாளிதழில் பதிப்பக நிறுவனமான அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்தை (ஏஜேஎல்) காலி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக அந்த நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.  

சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான சட்டப் பிரிவுகளின் கீழ், ஏஜேஎல் நிறுவனத்துக்கு மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத் துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தில்லியின் ஐடிஓ பகுதியிலுள்ள கட்டடத்தை குத்தகைக்கு எடுத்துள்ள ஏஜேஎல் நிறுவனத்தின் பங்குகளை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் முன்னாள் தலைவர் சோனியா காந்தி பெரும்பான்மை பங்குதாரர்களாக உள்ள "யங் இந்தியா' நிறுவனம் வாங்கியுள்ளது.

ஐடிஓ கட்டடத்தின் மூலம் கிடைக்கக் கூடிய வர்த்தக லாபத்தை மனதில் கொண்டே இந்தப் பங்கு மற்றும் பணப் பரிவர்த்தனை நடைபெற்றதாகக் குற்றம் சாட்டியுள்ள தில்லி உயர்நீதிமன்றம், அந்தக் கட்டடத்தை காலி செய்யுமாறு வெளியிடப்பட்ட மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து ஏஜேஎல் தாக்கல் செய்த மனுவை கடந்த மாதம் 28-ஆம் தேதி தள்ளுபடி செய்தது. இந்த நிலையில், இதுதொடர்பாக விளக்கம் கேட்டு ஏஜேஎல் நிறுவனத்துக்கு மத்திய அரசு தற்போது நோட்டீஸ் அனுப்பியுள்ளது.