நோட்டாவுக்கு வாக்களிக்க வேண்டாம் - ஆர்எஸ்எஸ் தலைவர்

நோட்டாவுக்கு வாக்களிக்க வேண்டாம் - ஆர்எஸ்எஸ் தலைவர்

வாக்களிப்பது நமது கடமை. அனைவரும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும். ஆனால் யாரும் நோட்டாவுக்கு வாக்களிக்க வேண்டாம். போட்டியிடும் வேட்பாளர்களில் தங்களுக்கு விருப்பமானவர்களுக்கு வாக்கு செலுத்த வேண்டும். தேசத்தின் பாதுகாப்பு, வளர்ச்சி, தனித்துவம் ஆகியவற்றைக் காக்கும் வகையில் வாக்குகள் அமையும். தேர்தலில் இவரா அல்லது அவரா என்பதை வாக்காளர்கள் உறுதியாகத் தெரிவிக்க வேண்டும்.

நோட்டாவுக்கு வாக்களிப்பது என்பது யாரையும் தேர்வு செய்யாமல் மெளனமாக இருப்பதற்குச் சமம். அடுத்து அமையும் அரசு முழுமையாக தேசநலன் சார்ந்த அரசாக இருக்கும் என்று நம்புகிறேன் என்றார்.