பகவான் கிருஷ்ணர் குறித்து அவதூறு தி.க. தலைவர் வீரமணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

பகவான் கிருஷ்ணர் குறித்து அவதூறு தி.க. தலைவர் வீரமணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

பகவான் கிருஷ்ணரைப் பற்றி அவதூறாகப் பேசிய திராவிடர் கழகத தலைவர் கி.வீரமணி மீது வழக்கு பதிவு செய்ய வேண்டு மென மன்னார்குடி செண்பக மன்னார் செண்டலங்கார சம்பத்குமார ராமானுஜ ஜீயர் வலியுறுத்தியுள்ளார். 

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, பகவான் கிருஷ்ணரைப் பற்றி அவதூறாகவும், கிருஷ்ணர் மீது ஈவ்டீசிங் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் பேசியிருப்பதும் கண்டிக்கத்தக்கது. வருத்தத்துக்குரியதுபிற மதங்களைப் பற்றி விமர்சனம் செய்தால் வழக்குப் பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார்கள். ஆனால், கி.வீரமணி போன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது வருத்தத்துக்குரியது.

கி.வீரமணி போன்றோர் மீது தனிப்பட்ட முறையில் வழக்கு தொடர்ந்தால் அவர்கள், நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டுக் கொண்டு தப்பித்து விடுகின்றனர். ஏற்கெனவே இது போன்ற அனு பவங்கள் உள்ளன.