பங்கு குறியீடுகள் உயர்வு

பங்கு குறியீடுகள் உயர்வு

இந்திய பங்குச்சந்தை இன்று உயர்வை சந்தித்து முதலீட்டாளர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மும்பை பங்கு சந்தை குறியீடு 450 புள்ளிகள் உயர்ந்து  36,170க்கு முடிவடைந்தது.  நிப்டி எனப்படும் தேசிய பங்குசந்தை குறியீடு  130 புள்ளிகள் உயர்ந்து  10,859க்கு முடிவடைந்தது. 

மும்பை பங்கு சந்தையில் பஜாஜ் ஆட்டோ, கோடாக் மகேந்திரா பாங்க், மஹேந்திரா அண்ட் மஹேந்திரா, வேதாந்தா, மற்றும் இண்டஸ்இண்டு பாங்க் ஆகிய நிறுவன பங்குகள் குறிப்பிடதக்க உயர்வை சந்தித்தன.