'பஞ்சாப் சிங்கம்' -  பிறந்த தினம்

'பஞ்சாப் சிங்கம்' - பிறந்த தினம்

'பஞ்சாப் கேசரி' என்று புகழப்பட்ட லாலா லஜபதி ராய்யின் பிறந்த தினம் இன்று. இந்திய சுதந்திர போராட்டத்தில் லால்-பால்-பால் என்று பிரபலமாக குறிப்பிடபட்ட மூவர் லாலா லஜபதி ராய், பாலகங்காதர திலகர் மற்றும் விபின் சந்திர பால் ஆவர். இந்திய சுதந்திர போராட்டத்தில் காந்தியின் பிரவேசத்திற்கு முன்பே போராட்டத்தை துவக்கியவர் லாலா லஜபதி ராய். இந்து மகாசபையின் உறுப்பினராகவும் இருந்தார். 

1928ம் ஆண்டு சைமன் கமிஷனுக்கு எதிரான போராட்டத்தில் போலீஸாரால் தாக்கப்பட்டார். பின்னர், அந்த காயங்களிலிருந்து மீளாமலே மரணமடைந்தார். இவரது மரணம் மக்களிடையே பலத்த அதிர்ச்சியையும், பகத் சிங் போன்ற விடுதலை போராட்ட வீரர்கள் உருவாக காரணமாகவும் அமைந்தது. 

இன்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் விடுத்துள்ள செய்தியில் ,"நாட்டு மக்களை காலனி ஆதிக்கத்திற்கு எதிராக போராடவும், சுதேசி இயக்கம் மற்றும் சமூக சீர்த்திருத்ததிற்கு ஆதரவாகவும் இயங்க  தூண்டு கோலாக  விளங்கியவர் லாலா லஜபதி ராய்." என்று குறிப்பிட்டுள்ளார்.