பஞ்சாயத்து நல்லபடியாக முடிந்தது.

பஞ்சாயத்து நல்லபடியாக முடிந்தது.

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் கிரிக்கெட் போட்டி என்றாலே அது இரு நாடுகளுக்கும் இடையில் போர் மூள்வது போன்று பரபரப்பாகத்தான் இருக்கும். இந்நிலையில் 2015ம் ஆண்டு முதல்  2023ம் ஆண்டு வரை 5 இருதரப்பு தொடர்களை நடத்த இந்திய கிரிக்கெட் வாரியமும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் ஒப்பந்தம் செய்திருந்தன. ஆனால், எல்லையில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாட முடியாது என்று இந்திய கிரிகெட் வாரியம் ஒப்பந்தத்தை ரத்து செய்து கொண்டது. பாகிஸ்தான் இரு தரப்பு போட்டிகள் நடைபெறாவிட்டால் தங்களுக்கு பலத்த நஷ்டம் ஏற்படும் என்றும் அதனால் சமரசத்திற்கு வருமாறும், 5 போட்டிகளில் இரண்டிலாவது பாகிஸ்தான் வந்து விளையாடுமாறும் மற்ற போட்டிகளை வேண்டுமானால் வேறு ஏதாவது நாட்டில் வைத்துக்கொள்ளலாம் என்றும் கோரிக்கை விடுத்தது. இதற்கு இந்தியா ஒப்புக்கொள்ளததால், ஐசிசிஐயிடம் பாகிஸ்தான் முறையிட்டது.

அதில், தங்களுக்கு இந்தியா 70 மில்லியன் டாலர்கள் நஷ்ட ஈடாக தரவேண்டும் என்று கோரியிருந்தது. இந்த விசாரணை கடந்த அக்டோபர் மாதம் 1-3 வரை மூன்று நாட்கள் ஐசிசிஐயில் நடந்தது. இந்த விவகாரத்தில் மேல் முறையீடு செய்யக்கூடாது என்றும் தீர்ப்பை இருதரப்பும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் ஐசிசிஐ திட்டவட்டமாக தெரிவித்திருந்தது.

இந்த தீர்ப்பு இன்று வெளியாகியிருக்கிறது. இதில் இந்தியா பாகிஸ்தானுக்கு எந்த நஷ்ட ஈடும் தரவேண்டியதில்லை என்று தீர்ப்பாகியிருக்கிறது. இது இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.