பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று துவங்குகிறது

பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று துவங்குகிறது

இந்த ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 11 மணிக்கு குடியரசு தலைவர் உரையுடன் துவங்குகிறது. இடைக்கால பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது. நிதியமைச்சர் அருண் ஜெயட்லி அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருவதால் அந்த துறையை கூடுதலாக கவனித்து வரும் பியூஷ் கோயல் பட்ஜெட்டை தாக்கல் செய்வார். 

இந்த கூட்டத்தொடர் சுமூகமாக நடை பெற அனைத்து கட்சிகளின் ஒத்துழைப்பையும் பெறும் பொருட்டு நாடாளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜன் நேற்று அனைத்து கட்சி கூட்டத்தை நடத்தினார். விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வர இருப்பதால் இந்த பட்ஜெட் இடைக்கால பட்ஜெட் ஆகவே அமையும்.