பட்டாசு தொழிற்சாலையை மூட உத்தரவிட்டு ஏழைகளின் வேலைவாய்ப்பை பறிக்க மாட்டோம்

பட்டாசு தொழிற்சாலையை மூட உத்தரவிட்டு ஏழைகளின் வேலைவாய்ப்பை பறிக்க மாட்டோம்

பட்டாசு ஆலையில் பணி புரியும் ஆயிரக்கணக்கான ஏழைத் தொழிலாளர்கள் வேலையிழக்கும் உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப் பிக்காது. அவ்விதம் பிறப்பித்தால் அவர்கள் வறுமையில் தள்ளப் படுவர். நீதிமன்றத்தால் வேலை வாய்ப்பை உருவாக்க முடியாத நிலையில், நீதிமன்ற உத்தரவு மூலம் ஏழை மக்களின் வாழ்வா தாரத்தை சிதைக்கும் வகையிலான நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது என்று கருதுவதாக நீதிபதி போப்டே தெரிவித்தார்.

பாவளி பண்டிகை சமயத்தில் பட்டாசு வெடிப்பதால் மட்டுமே காற்று மாசு ஏற்படுவதாகக் கூறுவதற்கு போதுமான ஆய்வு, புள்ளிவிவர தகவல்கள் கிடையாது என்றும், ஒரு தொழில் துறையின் அடிப்படை உரிமையை பறிக்கும் வகையில் போதுமான ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளை கூறக்கூடாது என்றும் வாதிட்டனர். இதுகுறித்து உரிய ஆதாரங்கள், ஆய்வு முடிவுகள் கிடைக்கும் வரை நீதிமன்றம் தீர்ப்பு அளிப்பதை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். 

பட்டாசு தொழிற்சாலை மூலம் ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் கோடி வருமானம் கிடைப்பதாகவும், இந்தத் தொழிலை நம்பி 5 லட்சம் குடும்பங்கள் உள்ளதாகவும் கூறப்பட்டது.

ஒரு மாநிலத்துக்கு மிகக் கணிச மான வருவாயை அளிக்கும் ஒரு தொழில், அதை நம்பி 5 லட்சம் குடும்பங்கள் உள்ள நிலையில் தடை விதித்து அதை கேள்விக்குறி யாக்கிவிடக் கூடாது என்று பட்டாசு உற்பத்தியாளர்கள் சார்பில் வாதிடப்பட்டது.

இந்த வழக்கைப் பொறுத்த மட்டில் மக்கள் நலன் மற்றும் ஒரு தொழிலுக்குள்ள உரிமை ஆகியவற்றை சீர்தூக்கி பார்க்க வேண்டிய பொறுப்பு நீதிமன்றத் துக்கு உள்ளதாக ஏற்கெனவே இந்த வழக்கு விசாரணையின் போதும் தெரிவித்திருந்தது குறிப் பிடத்தக்கது.