பட்டாசு வெடிக்க நேரம் குறிச்சாச்சு

பட்டாசு வெடிக்க நேரம் குறிச்சாச்சு

வருகிற செவ்வாய்க்கிழமை  நவம்பர் 6ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தீபாவளியன்று பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக தீபாவளியன்று இரண்டு மணிநேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் என்றும் அந்த இரண்டு மணி நேரத்தை அந்தந்த மாநில அரசுகளே நிர்ணயித்துக்கொள்ளலாம் என்றும் தீர்ப்பு கூறியிருந்தது.

இதன் படி, தமிழகத்தில் தீபாவளியன்று காலை 6மணியிலிருந்து  7 மணி வரையும்  இரவு  7மணியிலிருந்து  8 மணி வரையும் பட்டாசு வெடிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் குழந்தைகள், பெரியவர்கள், வர்த்தகர்கள் என அனைத்து தரப்பினரும் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.