"பண முதலைகளை சார்ந்து இருக்கக்கூடாது" - பா.ஜனதா தலைவர்

"பண முதலைகளை சார்ந்து இருக்கக்கூடாது" - பா.ஜனதா தலைவர்

டெல்லியில், தீனதயாள் உபாத்யாயா நினைவு தினத்தையொட்டி, பா.ஜனதா ஊழியர்கள் கூட்டம் நடைப்பெற்றது. அதில், அக்கட்சி தலைவர் அமித் ஷா பேசியதாவது :

தொண்டர்கள் நன்கொடையில்தான் பா.ஜனதாவை நடத்த வேண்டும். தொண்டர்கள் தங்கள் வருவாயில் ஒரு பகுதியை கட்சிக்கு தர வேண்டும். ஒரு வாக்குச்சாவடிக்கு தலா 2 பேராவது, தலா ஆயிரம் ரூபாயை பிரதமரின் ‘ஆப்’ மூலமாகவோ, காசோலை மூலமாகவோ நன்கொடையாக அளிக்க வேண்டும்.

அதை விட்டுவிட்டு, பண முதலைகள், கட்டுமான அதிபர்கள், தொழிலதிபர்கள், ஒப்பந்ததாரர்கள், கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் ஆகியோரின் நன்கொடையை சார்ந்து இருகக்கூடாது. அது நமது லட்சியத்தை களங்கப்படுத்திவிடும் என்று அவர் கூறினார்.