பத்திர பதிவில் விரல் ரேகை

பத்திர பதிவில் விரல் ரேகை

பத்திரங்களை பதிவு செய்த அன்றே அங்கீகரிக்கப்பட்ட நபரின் கை விரல் ரேகையை பதிவு செய்து உடனுக்குடன் பத்கிரங்களை பொதுமக்கள் பெற்று செல்லும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

பத்திரப் பதிவுக்காக வரும் மக்களை அடுத்த நாளும் அலைய விடக் கூடாது என்ற நோக்கத் தில் இந்த திட்டம் கொண்டுவரப் பட்டுள்ளது. பதிவுத் துறையில், வரிசையாக பெறப்படும் பத்திரத்துடன் மூல ஆவணங்களை சரி பார்த்து, வாங்குபவர், விற்பவரின் அடையாள ஆவணங்களை ஆய்வு செய்து, அதன்பின் அவர்களை புகைப்படம் எடுத்து, கைரேகை பதிவு பெற்று, பத்திரத்தை ஸ்கேன் செய்து, அதற்கான எண்ணை எழுதி, சீல் வைப்பது உள்ளிட்ட பணிகள் உள்ளன. இப்பணிகளை முடிக்க அதிகபட்சம் ஒரு மணி நேரம் ஆகும். எனவே, ஒரு மணிநேரத்தில், பதிவு செய்யப்பட்ட பத்திரம் திரும்ப வழங்கப்படும்
இந்த தகவலை தமிழக பாத்திரபதிவுத்துறை வெளியிட்டுள்ளது.