பயங்கரவாதத்திற்கு முடிவு கட்டும் நேரம் வந்துவிட்டது - ரஜினிகாந்த்

பயங்கரவாதத்திற்கு முடிவு கட்டும் நேரம் வந்துவிட்டது - ரஜினிகாந்த்

இந்தியாவில் பாதுகாப்புப் படை வீரர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய மிகமோசமான இந்த தாக்குதல் சம்பவம் தேசம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு நடிகர் ரஜினிகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) வீரர்கள் வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் நடத்திய வன்முறை தாக்குதல் மன்னிக்க முடியாதது. வன்மையாக கண்டிக்கத்தக்கது. காட்டுமிராண்டித்தனமான செயலுக்கு முடிவுகட்டும் நேரம் வந்துவிட்டது என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.