பயங்கரவாதத்துக்கு "புதிய இந்தியா" பதிலடி - பிரதமர் மோடி

பயங்கரவாதத்துக்கு "புதிய இந்தியா" பதிலடி - பிரதமர் மோடி

உத்தரப் பிரதேச மாநிலம், வாராணசியில் பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்கிறார். இந்நிலையில், வியாழக்கிழமை அங்கு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பயங்கரவாதத்துக்கு "புதிய இந்தியா' பதிலடி கொடுக்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் எனது தலைமையிலான அரசு பயங்கரவாதத்துக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்தது. 

இந்தியாவுக்கு சர்வதேச நாடுகள் ஆதரவளிக்கின்றன. அண்மையில், இலங்கையில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்துவிட்டனர். கடந்த 5 ஆண்டுகளில் பல வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். இதற்கான பலன்கள் அடுத்த 5 ஆண்டுகளில் தெரியும். புல்வாமாவில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். அதே பகுதியில் நமது ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கையில் 42 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர். காசி விஸ்வநாதரின் அருளால் மீண்டும் வாராணசியில் எம்.பி.யாகும் வாய்ப்பு எனக்கு கிடைக்கும் என்றார் மோடி.