பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான போர் எந்த மதத்துக்கும் எதிரானது அல்ல - சுஷ்மா ஸ்வராஜ்

பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான போர் எந்த மதத்துக்கும் எதிரானது அல்ல - சுஷ்மா ஸ்வராஜ்

இஸ்லாம் என்பது அமைதி மார்க்கம். உலகம் முழுவதும் பயங்கரவாதமும், தீவிரவாதமும் பல்வேறு பெயர்களையும், அடையாளங்களையும் தாங்கி உலவி வருகின்றன. அவற்றின் நோக்கங்களும் பல்வேறுபட்டவையாக உள்ளன. எனினும், அனைத்து பயங்கரவாத அமைப்புகளும் மத போதனைகளைத் திரித்து, நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்ற போலியான நம்பிக்கையை திணிப்பதன் மூலம் செயல்படுகின்றன. அத்தகைய பயங்கரவாதத்தை எதிர்த்து நடைபெறும் போர், எந்த மதத்துக்கும் எதிரானது அல்ல. இஸ்லாமியர்களின் புனித நூலான திருக்குரானில், மதம் தொடர்பாக எதையும் வலுக்கட்டாயமாகத் திணிக்கத் தேவையில்லை என்று கூறப்பட்டுள்ளது. 

வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஐக்கிய அரபு அமீரகத் தலைநகர் அபுதாபியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு (ஓஐசி) மாநாட்டில் பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்பது எந்த மதத்துக்கும் எதிரானது அல்ல என்று தெரிவித்துள்ளார். ஓஐசி-யின் உறுப்பு நாடான பாகிஸ்தானின் கடுமையான எதிர்ப்புக்கிடையிலும் இந்த மாநாட்டில் உரையாற்ற சுஷ்மா ஸ்வராஜுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது, இந்தியாவின் ராஜீய ரீதியிலான வெற்றி என்று கருதப்படுகிறது. 57 இஸ்லாமிய நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட ஓஐசி அமைப்பின் மாநாட்டில், இந்தியாவைச் சேர்ந்த அமைச்சர் உரையாற்றுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.