'பயங்கரவாதத்தை வேரறுக்க மத்திய அரசால் முடியும்'

'பயங்கரவாதத்தை வேரறுக்க மத்திய அரசால் முடியும்'

''பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கும் திறமையும், தகுதியும், மத்திய அரசுக்கு உள்ளது,'' என, தேசிய பாதுகாப்பு ஆலோசகர், அஜித் தோவல் கூறினார். 

ஜம்மு - காஷ்மீர் மாநிலம்,புல்வாமாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலை, இந்தியா மறக்க வில்லை; மறக்கவும் மறக்காது.பயங்கரவாதத்தை வேரறுக்கவும், அதை ஆதரிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், மத்திய அரசுக்கு, திறமையும், தகுதியும் உள்ளது.நாம் என்ன செய்ய வேண்டும்; நம் வழி என்ன; நாம் எப்படி, எப்போது பதிலடி தர வேணடும் என்பதை, திட்டமிட்டு செய்ய முடியும். அதற்கான தைரியமும், திறமையும் நாட்டின் தலைமையிடம் உள்ளது. 

உள்நாட்டு பாதுகாப்புக்கு பிரச்னைகள் ஏற்பட்ட போது, பல நாடுகளில் அரசுகள் கவிழ்ந்து உள்ளன; அரசியல் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால், இந்தியாவில் ஒரு போதும், அப்படி நடந்தது இல்லை. அமைதி, சட்டம் -ஒழுங்கு ஆகியவற்றை பாதுகாப்பதில், ரிசர்வ் போலீஸ் படையின் பங்கு, முக்கியத்துவம் வாய்ந்தது. இவ்வாறு குர்கானில், மத்திய ரிசர்வ் போலீஸ் படையின், 80ம் ஆண்டு விழாவில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், அஜித் தோவல் பேசினார்.