பயங்கரவாதம் - பலிகடா ஆக மாட்டோம், இனி பொறுக்கமாட்டோம்

பயங்கரவாதம் - பலிகடா ஆக மாட்டோம், இனி பொறுக்கமாட்டோம்

சி.ஐ.எஸ்.எப்., எனப்படும், மத்திய தொழில் பாதுகாப்புப் படையின், 50வது ஆண்டு நிறைவையொட்டி, உத்தர பிரதேச மாநிலம், காசியாபாதில் நேற்று அணிவகுப்பு நிகழ்ச்சி நடந்தது. அதில் பங்கேற்ற, பிரதமர் நரேந்திர மோடி ''பயங்கரவாதத்துக்கு, நாட்டை பலிகடா ஆக்க மாட்டோம்; பயங்கரவாத விஷயத்தில் இனி பொறுக்க மாட்டோம்,'' என கூறியுள்ளார். 

மேலும், அண்டை நாடு விரோத போக்குடன் உள்ளது; இங்குள்ள சிலர், அவர்களுக்கு ஆதரவாக, நம் நாட்டுக்கு எதிராகவே சதி செய்கின்றனர். இது போன்ற சூழ்நிலையில், நாட்டின் பாதுகாப்பில், சி.ஐ.எஸ்.எப்., போன்ற துணை ராணுவப் படைகளும், நம் முப்படைகளும் மிகவும் தீவிரமாகவும், அதிக விழிப்புடனும் இருக்க வேண்டியுள்ளது. நாட்டை பாதுகாக்கும் இது போன்ற வீரர்களை மதிக்க வேண்டும். ஆனால், வி.ஐ.பி., கலாசாரம் இன்னும் இங்கு ஒழியவில்லை. அனைவரையும் மதிக்கும் கலாசாரம், மனமாற்றம் மக்களிடையே ஏற்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.