பயங்கரவாதிகளுக்கு மரியாதை கொடுக்கும் காங்கிரஸ் கட்சி

பயங்கரவாதிகளுக்கு மரியாதை கொடுக்கும் காங்கிரஸ் கட்சி

        சில தினங்களுக்கு முன் திருவாளர்  ராகுல் காந்தி ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அஸாரை விழிக்கும் போது, மசூத் அஸார் ஜி என மரியாதையாக குறிப்பிட்டுள்ளார்.  காங்கிரஸ் கட்சியை பொறுத்த மட்டில், தேச பக்தர்களை விழிக்கும் போது, துரோகிகளாக சித்தரிப்பதும், பயங்கரவாதிகளை மரியாதையாக அழைப்பதும், அவர்களுக்கு வக்காலத்து வாங்குவதும் வாடிககையான ஒன்றாகும்.  தனது தாய் நாடு பாரத தேசம் என்பதையே மறந்து விட்டு பாகிஸ்தானுக்கு விசுவாசமாக நடக்கும் காங்கிரஸ் தலைவர்கள் அவ்வப்போது உதிர்க்கும் சொல் ஜி என்பதும், அவர்கள் தான் நடத்தினார்களா என்பது பற்றி சந்தேகம் எழுப்புவதும் வாடிகையாக மாறிவிட்டது.   

          1998-ல் கோவையில் அத்வானியை கொல்ல நடந்த வெடி குண்டு தாக்குதல் சம்பந்தமாக கைது செய்யப்பட்ட அப்துல் நாசர் மதானியை சிறையில் சந்தித்தத காங்கிரஸ் தலைவர்கள் உண்டு.  கோவை குண்டு வெடிப்பு வழக்கிலிருந்து விடுதலை பெற்றாலும், 2008 பெங்களுர் குண்டு வெடிப்பில் தொடர்பு இருப்பதாக கைது செய்யப்பட்ட மதானியை விடுவிக்க கேரள காங்கிரஸ் தலைவர்கள் கா்நாடக தலைவர்களுக்கு நெருக்கடி கொடுத்த நிகழ்வு நடந்துள்ளது.  அன்றைய கேரள முதல்வராக இருந்த திருவாளர்  Omman Chandy  என்பவர் கா்நாடக முதல்வர் Jagadish Shettar  க்கு, மதானியின் மகள் திருமணத்திற்கு ஜாமீனில் விடுவிக்க தாங்கள் முயற்சி எடுக்க வேண்டும் என கடிதம் எழுதியுள்ளார்.   

          கேரள காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதாலா, கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு, மதானியை ஜாமீனில் விடுவிக்க கேட்ட பிணையத் தொகை மிகவும் அதிகமாக இருப்பதால், குறைக்க கோரி கடிதம் எழுதினார்.  மதானியின் மகள் திருமணத்தில் கன்னனூர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான கே.சுதாகரன், கட்சியின் மாநில தலைவர்  Satheean Pacheni  என்பவரும் கலந்து கொண்டார்கள்.  ஆகவே குண்டு வெடிப்பு வழக்கில் குற்றவாளியான அப்துல் நாசர் மதானிக்காக வாதாடிய காங்கிரஸ் கட்சி, மராட் கலவரத்தின் போது, தாக்குதல்கள் நடத்திய இஸ்லாமியர்களுக்கு ஆதரவாகவே ஊடகங்களில் பேசினார்கள்.  மதானியின் மீது 2007-ல் பல்வேறு வழக்குகள் போடப்பட்டன. விசாரனை நடந்து கொண்டிருக்கும் போதே, எவ்வித காரணமும் கூறாமல், அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்பட்டன. 

          நாடு முழுவதும் நடந்த பல்வேறு குண்டு வெடிப்பு வழக்குகளிலும், பயங்கரவாத செயல்பாடுகளிலும் சிமி இயக்கதினருக்கு பங்கு உள்ளது என்ற ஆதராங்களின் அடிப்படையில், அந்த அமைப்பிற்கு தடைவிதிக்கப்பட்டது.  தடையை எதிர்த்து மேல் முறையீடு செய்த போது 2006 ஜீலை மாதம் உச்ச நீதி மன்றத்தில் சிமி இயக்கத்திற்காக வாதாடிய வழக்கறிஞர் திருவாளர் சல்மான் குர்ஷித்.  உத்திர பிரதேச காங்கிரஸ் கட்சியின் தலைவர்.  நீதி மன்றத்தில் வாதாடிய போது,  சிமி ஒரு சமுதாய அமைப்பு என நற்சான்றிதழ் வழங்கியவர்்.   இதில் மிகப் பெரிய வேடிக்கை என்னவென்றால், 2008-ல் நடந்த அகமதாபாத் குண்டு வெடிப்பு, ஜெய்பூர் குண்டு வெடிப்பு, டெல்லி குண்டு வெடிப்பு, 2006-ல் நடந்த மும்பை ரயில் குண்டு வெடிப்பு சம்பவங்களில் சிமிக்கு தொடர்பு இருப்பதாக பாராளுமன்றத்தில் உள்துறை அமைச்சராக இருந்த சுசில் குமார் ஷின்டே தெரிவித்தார்.   இவர்கள் தான் பயங்கரவாதிகளுக்கு சர்வ மரியாதை கொடுப்பவர்கள்.    

          வார்த்தையில் விஷத்தை வைத்து பேசுபவர் திருவாளர் திக்விஜய் சிங்,  முன்னாள் மத்திய பிரதேச முதல்வராக இருந்தும் கூட, பயங்கரவாதிகளுக்கு வக்காலத்து வாங்குபவர்.  அமெரிக்கா ஒசாமா பின்லேடனை கொன்ற பின்னர், திக்விஜய்சிங் தனது டுவிட்டாரில்,   I said in Sarcasm to the fact that Osama “Ji” was staduing close the Pakistan Military Academy without the knowledge of  Pakistan army  என 25.9.2017-ல் பதிய விட்டார்.   காஷ்மீரில் நடந்த துப்பாக்கி சண்டையில் பயங்கரவாதி புர்ஹான் வானி கொல்லப்பட்ட போது, செய்தியாளர்களிடம்,   Pakistan Occupied Kashmir  என்பதற்கு பதிலாக India Occupied Kashmir என குறிப்பிட்டார்.  இப்படிப்பட்ட காங்கிரஸ் தலைவர்களை வைத்துக் கொண்டு தான் ராகுல் காந்தி, மகாத்மா காந்தியை பற்றி பேசுகிறார்.   உள்துறை அமைச்சாரக இருந்த ப.சிதம்பரம், டெல்லி பாட்டியலா சம்பவம், என்கவுன்டர் என குறிப்பிட்டாலும், இன்று வரை திக்விஜய்சிங் திட்டமிட்ட படுகொலை என கூறி வருவதை தடுப்பதற்கு கூட காங்கிரஸ் கட்சியின் தலைவர்களுக்கு நேரம் கிடைக்கவில்லை.  ஏன் என்றால் பயங்கரவாதிகளை ஆதரிப்பதால் வந்த வினையாகும்.

          2001 முதல் 2016 வரை அஸ்ஸாம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியிலிருந்தது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.   தொடர்ந்து ஆட்சியில் இருப்பதற்காகவே பயங்கரவாத, பிரிவினைவாத, தடை விதிக்கப்பட்ட  அமைப்பான உல்பாவுடன் தொடர்பில் இருந்தவர்கள் காங்கிரஸ் கட்சியினர்.   முன்னாள் திரிபுரா மாநில டி.ஜி.பி. திரு. Ghanashyam Murari Srivastava says,   In 2001 Congress win in the elections  in Assam in exchange for a huge amount of money     என்பவர் கூறியது.   உல்பாவுடன் கூட்டணி வைத்துக் கொண்டு தேர்தலை சந்தித்தவர்கள் காங்கிரஸ் கட்சியினர்.  உல்பா தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பு என்பதை மறந்து விட்டு, தேர்தல் ஆதாயத்திற்காக கூட்டணி வைத்தவர்கள். 

          இந்தியாவில் நடந்தும் பயங்கரவாத தாக்குதல்களுக்கு முளையாகயிருந்து செயல்படும் நாடு பாகிஸ்தான்.  லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது என்ற இரண்டு அமைப்புகளை உருவாக்கியவர்கள் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ.  என்பது உலகறிந்து விஷயம்.   காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான மணிசங்கர் ஐயர், பாகிஸ்தானின் டி.வி. நடத்திய் விவாதத்தில்,  பாகிஸ்தான் இந்தியா பேச்சு வார்த்தை மீன்டும் தொடர வேண்டுமானால், இந்தியாவில் பிரதமர் பதவியிலிருந்து மோடி விலக வேண்டும்.  மோடி ஆட்சியில் இருக்கும் வரை பேச்சு தொடர முடியாது என்றார்.  ஆனால் இந்தியாவில் பயங்கரவாத செயல்களை செய்யும் அமைப்புகளை தடை செய்ய வேண்டும் என்ற சிந்தனையில்லாமல், பாகிஸ்தானுக்கு ஆதரவாக களம் கண்டவர்கள் காங்கிரஸ் கட்சியினர்.

          காங்கிரஸ் கட்சியின் தலைவி திருமதி சோனியா காந்தி,  2001-ல் சிமி மீது தடைவிதிக்கப்பட்ட போது, பாராளுமன்றத்தில், தடைவிதிப்பதால் மட்டும் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த முடியாது என சிமிக்கு ஆதரவாக பேசியவர்.   பாராளுமன்ற கட்டிடத்தை தாக்க முற்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற அப்சல் குருவுக்கு ஆதரவாக டெல்லி ஜவஹர்லால் பல்கலை கழகத்தில் இடதுசாரி மாணவர்கள் அமைப்பினர் நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்டு அப்சல் குருவுக்கு ஆதரவாகவும்,  பாரத தேசத்தை துண்டு துண்டாக்கவோம் என கோஷமிட்டவர்கள் மத்தியில் பேசியவர் ராகுல் காந்தி.  இவர்களுக்கு தேசத்தின் பாதுகாப்பு என்பதை விட, ஆட்சியில் அமர வேண்டும் என்ற சிந்தனையை தவிர வேறு ஒன்றும் கிடையாது. 

          திருவாளர் ராகுல் காந்தி வெளிநாடு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் போது, இஸ்லாமிய பயங்கரவாத செயல்களுக்கு ஆதரவாகவே கருத்துகளை வெளியிட்டு வந்துள்ளார்.  மத்தியில் காங்கிரஸ் ஆட்சியிலிருக்கும் போதே, 2010 டிசம்பர் மாதம்,  அமெரிக்காவின் தூதரிடம் பேசிய போது,  2008-ல் மும்பையில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை விட ஹிந்து தீவிரவாதம் மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது என்றார்.    இந்த வார்த்தைகளை விட மிகவும்  கொடுமையான விமர்சனம்,   the bigger threat may be the growth of radicalized Hindu Groups , which create religious tensions and political confrontations with the Muslim community  என   Roemer  அமரிக்க தூதர் தன் நாட்டிற்கு செய்தி அனுப்பினார்.  

          உண்மையில் ராகுல் காந்தி இந்த தேசத்தின் மீது அக்கரையிருக்குமானல்,  இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பிற்கு ஆதரவாக உச்ச நீதி மன்றத்தில் வழக்காடிய சல்மான் குர்ஷித் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.   மணி சங்கர் ஐயரை தற்காலிகமாக கட்சியிலிருந்து விலக்கிய ராகுல்  காந்தி ஏன் இந்த காரியத்தை செய்யவில்லை.   இந்திய தேசிய கொடியை அவமதிக்கும் விதமாக பேசிய தி.மு.க. தலைவர் நாஞ்சில் மனோகரன் பற்றி ஸ்டாலின் தற்போது கருத்தை பகிர்ந்து கொள்வாரா?  

- ஈரோடு சரவணன்