பயங்கரவாதி மசூத் அசாரை கறுப்புப்பட்டியலில் சேர்க்க இந்தியாவை தொடர்ந்து அமெரிக்கா தீவிரம்

பயங்கரவாதி மசூத் அசாரை கறுப்புப்பட்டியலில் சேர்க்க இந்தியாவை தொடர்ந்து அமெரிக்கா தீவிரம்

பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாரை கருப்புப் பட்டியலில் சேர்ப்பதற்கான வரைவு தீர்மானத்தை பிரிட்டன் மற்றும் பிரான்சின் ஒத்துழைப்புடன் ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலுக்கு அமெரிக்கா அனுப்பி உள்ளது. 15 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலுக்கு தீர்மான வரைவை அமெரிக்கா அனுப்பி உள்ளது. மசூத் அசாரை கருப்புப் பட்டியலில் சேர்ப்பதற்காக ஏற்கனவே இந்தியா மேற்கொண்ட முயற்சியை சீனா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி 2 வாரங்களுக்கு முன் தடுத்த நிலையில், தற்போது அமெரிக்கா நடவடிக்கை எடுத்துள்ளது.