பயங்கரவாத அமைப்புக்கு கிடைக்கும் நிதி - கள்ள நோட்டுகளைப் புழக்கத்தில் விடுவது

பயங்கரவாத அமைப்புக்கு கிடைக்கும் நிதி - கள்ள நோட்டுகளைப் புழக்கத்தில் விடுவது

      இந்திய ரூபாய் நோட்டுகளைப் போன்று,  கள்ள நோட்டுகளை பாகிஸ்தானிலிருந்து அச்சடிக்கப்பட்டு  அவற்றைப் இந்தியாவில் புழக்கத்தில் விடுவதில் கிடைக்கும் கமிஷன் தொகை முழுவதும், பயங்கரவாத இயக்கங்களுக்கு ஆயுதங்கள் வாங்குவது, ஜிகாதிகளுக்கு  நிதி உதவி அளிப்பது போன்ற காரியங்களுக்குக் கைகொடுக்கிறதுசதிகாரர்களும், பயங்கரவாத அமைப்புகளும் போலீசிடம் பிடிபடாமல், இந்தியாவில் தங்கள் நாசவேலைகளை நிகழ்த்த கள்ள நோட்டுத் தொழில் உதவுகிறதுபாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ். அச்சிட்டு அனுப்பிவைக்கும் கள்ளநோட்டுகளை —  மாற்றும் தொழிலில் அதிக அளவில் பயங்கரவாத அமைப்பில் உள்ள பெண்களை முழுமையாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.   இந்த நிதியானது  பயங்கரவாத அமைப்புகளின்  நெட்வொர்க்குகளுக்கு முக்கிய ஆதராமாக இருக்கிறதுகள்ளநோட்டுகளால் அதிக அளவில் பாதிக்கப்படுவது பொது மக்கள் தான் என்றாலும், இவற்றைப் புழகத்தில்  விடுவதின்  ஒரேநோக்கம், இந்தியப் பொருளாதாரத்தைச் சீர்குலைப்பதும், பயங்கரவாதத்திற்கு, போதைப் பொருள் கடத்தல் போன்றே, கள்ள நோட்டுகள் மூலமும் நிதி கிடைக்கிறது.

       பெங்களுரு குண்டு வெடிப்புக்காக சுமார் 30 லட்ச ரூபாய் கள்ள நோட்டுகள் பயன்படுத்தப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.இந்தியாவில் நடந்த பல பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபட்டவர்களுக்கு கள்ள நோட்டுகள் மூலமாகவே  அதிக அளவில்  நிதி கிடைத்துள்ளது.2005-ம் வருடம் பெங்களுரில் உள்ள இந்திய விஞ்ஞான கழகத்தில் நடத்திய குண்டு வெடிப்பிற்கும், 2007-ம் வருடம் ஆகஸ்ட் மாதம் ஹைதராபாத் நகரில் நடந்த இரண்டு குண்டு வெடிப்பு சம்பவங்களிலும், நவம்பர் மாதம் 26ந் தேதி மும்பையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்திலும், கள்ள நோட்டின் மூலம் கிடைத்த வருவாயைப் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பது கூட  விசாரணையில் தெரிய வந்தது.

         2007-ல் ஹைதராபாத் நகரில் குண்டு வெடித்தவுடன், காவல் துறையினர் நான்கு பேர்களை கைது செய்தனர், கைது செய்தவர்களில் துபாய் நாட்டைச் சேர்ந்தவர்களும் அடங்குவார்கள்.  இவர்களிடமிருந்து 100 கோடிக்கும் (23.6 மில்லியன்) அதிகமான இந்திய கள்ளநோட்டுகள் கைப்பற்றப்பட்டன. இவர்களிடம் நடத்திய விசாரணையில் ஹைதராபாத் தாக்குதலுக்கு 14 முதல் 16  கோடி ரூபாய் வரை செலவிட்டதாகத் தெரிவித்தார்கள். ஆகவே இந்தியாவில் நடந்த ஒவ்வொரு பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தின் போதும் பயங்கரவாத இயக்கங்கள் கணிசமான அளவுக்குக் கள்ளநோட்டுகளை உபயோகித்துள்ளன.

            2009-ம் வருடம் ஜனவரி மாதம் மகாராஷ்ட்ர மாநில பயங்கரவாதத் தடுப்பு காவல் துறையினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த  வாக்குமூலத்தில், பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்ட இந்திய கள்ள ரூபாய் நோட்டுகளை இந்தியாவில் புழக்கத்தில் விடுவதற்கு இநதியன் முஜாஹிதீன் அமைப்பினர் உதவி புரிந்துள்ளார்கள்.   கோடிக்கணக்கான கள்ளநோட்டுகளை இந்திய முஜாஹிதீன் அமைப்பின் பொறுப்பாளர்களான, ரியாஸ் பட்கல், இக்பால் பட்கல், அகமது யாசின் போன்றவர்கள் மௌலான ஹுசைன் சபீர் என்பவன் மூலம் புழக்கத்தில் விட்டார்கள் என்ற தகவலையும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்கள். இவ்வாறு புழக்கத்தில் விடும் பணத்தின் அளவில் இருபது முதல் நாற்பது சதவீதம்வரை பயங்கரவாத செயலுக்கு பயன்படுத்தப்பட்டது என்றும் அதில் குறிப்பிட்டிருந்தார்கள்.

      பாராளுமன்ற நிலைக்குழுவில் தெரிவிக்கப்பட்ட அறிக்கையில் 2010-ல் ரூ1,500 கோடி வரை கள்ள நோட்டு புழக்கத்தில் விடுக்கப்பட்டதாகவும், இந்த தொகை 2012-ல் 2,500 கோடியாக மாறிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டதுஇதில் வேடிக்கை என்னவென்றால் 2012லிருந்து பாகிஸ்தானிலிருந்து  கடத்தல் மூலமாக கொண்டு வரப்படும் கள்ள நோட்டுகள் அனைத்தும் பயங்கரவாத செயலுக்கு மட்டுமே பயன்படுத்துப்படுவதாக இந்திய அரசுக்கு அமெரிக்காவில் உள்ள உளவு நிறுவனம் தெரிவித்துள்ளது.

        25.06.2012ந் தேதி ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கையில் வெளிவந்த ஒரு செய்தி,  இந்தியாவில் புழக்கத்தில் விடப்பட்ட கள்ள நோட்டுகளில் 70 சதவீதம் பங்களாதேஷ் நாட்டிலிருந்து இஸ்லாமியப் பயங்கரவாதிகளால் மேற்குவங்க மாநிலம் வழியாக நாடுமுழுவதும் கொண்டுசெல்லப்பட்டுள்ளது என்பதாகும். இவ்வாறு கொண்டுவரப்பட்ட கள்ளநோட்டுகளின் மதிப்பில் குறைந்த பட்சம் 40 முதல் 50 சதவீதம் பயங்கரவாதச் செயலுக்கு பயன்படுத்தப்படுவதாகவும்  அந்த செய்தியில் தெரிவித்தார்கள்.    தாவுத் இப்ரஹிம் குழுவைச் சார்ந்தவர்கள் அப்தாப் பட்கி (Aftab Batki), ஹாஸி அப்துல்லா என்ற இருவர். கள்ள நோட்டுகளை பாகிஸ்தானிலிருந்து இந்தியா கொண்டு வந்து பயங்கரவாத இயக்கங்களுக்குப் பிரித்துக்கொடுக்கும் வேலையைச் செய்பவர்கள்பாகிஸ்தானிலிருந்து .எஸ். அனுப்புவது, லஷ்கர், அல்பதார், இந்தியன் முஜாஹிதீன் போன்ற அமைப்புகளுக்கு தாவுத் மூலமாகவே வழங்கப்படுகிறது என்பது இந்திய அரசுக்கு நன்கு தெரியும்.

          சில மாதங்களுக்கு முன் கைது செய்யப்பட்ட அப்துல் கரீம் துண்டாவிடம் நடத்திய விசாரணையில்,  பாகிஸ்தானில் அச்சிடக்கப்பட்ட கள்ள நோட்டுகளை அப்துல் கரீம் துண்டா மூலம்  இந்தியாவில் கள்ள நோட்டுகளை சுற்றுக்கு விடும் செயலில் ஈடுபட வைத்தது என்ற உண்மை வெளிச்சத்திற்கு வந்தது.

      கள்ள நோட்டுகள் கடத்தல்  சம்பந்தமாக இந்திய உளவுத் துறையினரின் தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகள் பற்றிய சில தகவல்களை பார்க்கலாம்.  7.3.2011ந் தேதி புது டெல்லியில் உள்ள கான் மார்க்ட் பகுதியில் ஹிஜ்புல் முஜாஹிதீன் என்ற பயங்கரவாத அமைப்பைச் சார்ந்த மூவர் கைது செய்யப்பட்டார்கள் இவர்களிடம் ரூ4.8 கோடி கள்ளநோட்டுகள் கைப்பற்றப்பட்டனவிசாரணையின்பொது பல ஆண்டுகளாகவே பாகிஸ்தானிலிருந்து கடத்தி வருவதாகக் கூறினார்கள்.  17.1.2011ல் புதுடெல்லியில் மரத்துண்டுகள் விற்பனை செய்யும், சுபீர் ஆலம் என்பவனிடமிருந்து சுமார் 10 லட்சம் கள்ள நோட்டுகள் கைப்பற்றப்பட்டன, இவன் சிமி இயக்கத்திற்கு ஆதரவானவன் என்றும், முன்னர் சிமியில் இருந்தவன் என்பதும் தெரியவந்த்து.

         2012-ம் வ்ருடம் புதுச்சேரியில் ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டுகளை விநியோகம் செய்த இஸ்மாயில் ஷேக் என்பவன் கைதுசெய்யப்பட்டான், இவன் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சார்ந்தவன்கைதுசெய்தபோது, \இவனுடன்சேர்ந்து ஐந்துபேர்கள் தமிழகத்திலும் கள்ளநோட்டுகளை விநியோகம்செய்ய வந்ததாகவும் தெரிவித்தான். சிட்லபாக்கத்தில் ஆயிரம்ரூபாய் நோட்டைக்கொடுத்து மாற்றமுயன்ற இஸ்ரா உல் ஷேக் என்பவனும், சைதாப்பேட்டையில் ராகுல்முகமது என்பவனும் கைதுசெய்யப்பட்டார்கள்.

       பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்டு, மேற்கு வங்கம், பங்களாதேஷ், நேபாளம் வழியாக இந்தியாவின் பிறமாநிலங்களுக்கு விநியோகிக்ப்படுகிறது என்றும், மேற்கு வங்க மாநிலத்தில் மால்டா மாவட்டம் கள்ள நோட்டுக் கும்பலின் தலைநகரம் எனவும், இவர்கள் தமிழக காவல்துறையினரின் விசாரணையில் தெரிவித்தார்கள்.

மத்திய பிரதேச தீவிரவாத தடுப்புப்படை நேபாள நாட்டைச் சார்ந்த சிலரிடமிருந்து கள்ளநோட்டை கைப்பற்றி, , பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், நேபாள மன்னர் பிரின்ஸ் பாராஸூக்கும் நிழல் உலக தாதா தாவுத் இப்ராஹிமிற்கும் இதில் தொடர்பிருப்பதாக தெரிந்தது என்று 2011-ம் வருடம் டிசம்பர் மாதத்தில் மத்திய உள்துறை அமைச்சராக இருந்த .சிதம்பரம்,தெரிவித்தார்.

        பாகிஸ்தானில் காராச்சியில் அச்சடிக்கப்படும் கள்ள நோட்டுகளை, பாகிஸ்தான் நாட்டின் .எஸ்.பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் மூலமாகவே நேபாளம்,  பங்களாதேஷ் மற்றும் இலங்கைக்கு அனுப்புகிறதுஇந்த விவரங்கள், தாய்லாந்து காவல் துறையினர் கள்ள நோட்டு கடத்தல்கார்ர்கள் கைது செய்து விசாரித்தபோது வெளிவந்தன.

         24.4.2008ந் தேதி டாக்காவில் நைளஷத் ஆலம் கான் என்பவனைக் கைதுசெய்தபோது, அவனிடமிருந்து 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள இந்திய கள்ளநோட்டுகள் கைப்பற்றப்பட்டன,  இவனுக்கும் பங்களாதேஷில் உள்ள பயங்கரவாத அமைப்பான ஹர்கத் உல் ஜிகாத் இஸ்லாமி அமைப்பின் தலைவர் முப்தி அப்துல் ஹன்னானுக்கும் தொடர்பு இருப்பது வெளிச்சத்திற்கு வந்த்து.

         2007-ம் வருடம் கள்ளநோட்டு விவகாரத்தில் பதிவான வழக்குகள் 2,204 என்றும், இதன் காரணமாக கைப்பற்றப்பட்ட தொகை ரூ3.63 கோடி என்றும் தெரிகிறது.   2008-ல் சி.பி. பதிவுசெய்த 13 வழக்குகள், கள்ளநோட்டுகள்மூலம் கிடைத்த நிதியை பயங்கரவாத அமைப்புகளுக்கு கொடுத்ததாகும்நவம்பர் மாதம் 26ம் தேதி மும்பையில் நடத்திய தாக்குதலுக்கு செலவான நிதி, கள்ளநோட்டை  இந்தியாவில் புழகத்தில் விடப்பட்டதில் கிடைத்ததே. ஆண்டு ஒன்றுக்கு இவ்வாறு கிடைப்பது ரூ1,800 கோடி என்றும், மேற்படி நிதியை பாகிஸ்தானின் ,எஸ். வழங்குகிறது என்றும் தெரிகிறது.  2005-ல் பெங்களுரில் விஞ்ஞான கழகத்தில் நடத்திய தாக்குதலுக்கு உபயோகப்படுத்திய பணம் ஐம்பது இலட்சம்  கள்ளநோட்டுகள் மூலம் கிடைத்தவையே என்றும் உளவுத்துறையினர் தெரிவித்தார்கள்.

       இந்தியாவில் புழகத்தில் விடப்பட்டுள்ள கள்ள நோட்டின் மதிப்பு 1,69,000 கோடி என அரசின் மதிப்பீட்டு குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளதுடெல்லியில் கள்ளநோட்டு விஷயத்தில் .எஸ்..யுடன் தொடர்பு கொண்டவர்களைப் பிடித்தபோது கைதானவர்கள்நயீம்(Nayeem), வாஸிம்(Wasun), முகமது முஸ்லிம் (Mohammed Muslim) ஆகிய மூவரும்இவர்கள் தார் எக்ஸ்பிரஸ் ரயிலில் பாகிஸ்தானில் உள்ள முன்னபாவ் (Munnabao)என்னுமிடத்திலிருந்து ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ஜோத்புர் வழியாக மற்ற மாநிலங்களுக்கு கொண்டு சென்றதாக விசாரணையின் போது தெரிவித்தார்கள்.

வங்கிகளில் கொள்ளையடித்தல்:

      ஆபரேஷன் விஜய் என்ற பெயரில் மத்தியப்பிரதேச அரசு பயங்கரவாதிகளை வேட்டையாடும்போது, இந்தியன் முஜாஹிதீன், மற்றும் சிமி அமைப்பைச் சார்ந்த எட்டு பேர்களைக் கைதுசெய்தார்கள். அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் ஐந்து வங்கிகளில் கொள்ளையடித்த விவரம் தெரியவந்ததுதேவாஸ் என்ற பகுதியில் இரண்டு வங்கிகளிலும், இட்டார்ஜி, ஜகுரா, பிப்ளிமாண்டி ஆகிய பகுதியில் ஒரு வங்கியிலும் கொள்ளையடிக்கப்பட்டது.

      வாக்குமூலத்தில் பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதிவசதியை உருவாக்கவே வங்கிகளில் கொள்யையடித்ததாக இவர்கள் தெரிவித்தார்கள்இவர்களின் தகவலை வைத்து போபாலில் உள்ள வங்கிகளில் கொள்ளையடித்த மேலும் நான்குபேர்கள் கைதுசெய்யப்பட்டார்கள்,   ஜபல்புரில் உள்ள வங்கியில் கொள்யையடித்தவர்கள், ஷேக் முஜிப், அஸ்லம், ஹபீப், சாஜித் என்பவர்கள். நாடு முழுவதும் நடந்துள்ள வங்கி கொள்யைடிப்புகளில் இஸ்லாமியப் பயங்கரவாத அமைப்பினர் மட்டும் கொள்ளையடிக்கவில்லை, மற்ற பயங்கரவாத அமைப்புகளான, மாவேயிஸ்ட்டுகள், உல்பா, மணிப்பூரில் உள்ள பயங்கரவாத அமைப்புகளும் இந்த செயலில் ஈடுபட்டன.

       இஸ்லாமியப் பயங்கரவாதிகள் தங்கள் இயக்கத்திற்கு நிதி ஆதாரங்களை ஏற்படுத்திக்கொள்ள இந்தியாவில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் சட்டவிரோதமான காரியங்களில் ஈடுபடுகிறார்கள் என்ற உண்மை இதுவரை வெளிச்சத்திற்கு வராமல் இருந்துதற்போது மெல்ல மெல்ல வெளியே வரத்துவங்கியுள்ளது.

- ஈரோடு சரவணன்