பரிட்சைக்கு நேரமாச்சு

பரிட்சைக்கு நேரமாச்சு

ஆண்டு இறுதி தேர்வுகளையும், பொதுத்தேர்வுகளையும் எதிர்கொள்வது குறித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொளி காட்சி மூலம் மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர், "மாணவர்களின் திறமைகளை கணக்கிடுவதற்கு நடத்தப்படும் தேர்வுகள் மாணவர்களை அச்சத்திற்கு உட்படுத்துவதற்கு அல்ல. மதிப்பெண்கள் மட்டுமே வாழ்க்கையின் வெற்றியை நிர்ணயிக்க முடியாது." என்றும் கூறினார்.

மேலும் பெற்றோருக்கு அவர்,"உங்கள் குழந்தைகள் தொழிற்நுட்பத்தை பயன் படுத்துகிறார்களா என்று பார்த்துக்கொள்ளும் அதே வேளையில் அவர்கள் அதில் மூழ்கி விடாதபடியும் பார்த்துக்கொள்ள வேண்டும்." என்றுஅறிவுரை கூறினார்.

பிரதமருடனான இந்த கலந்துரையாடல் மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாக பெற்றோரும், மாணவர்களும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.