பரீட்சைக்கும் தட்கல் உண்டு

பரீட்சைக்கும் தட்கல் உண்டு

வரவிருக்கும் பிளஸ் 1 பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில் தனித்தேர்வர்களாக விண்ணப்பிக்க தவறியவர்கள் தட்கல் முறையில் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. தட்கல் முறையில் விண்ணப்பிப்பவர்கள் கூடுதலா ரூ.1000/- செலுத்தி விண்ணப்பிக்கலாம். இதற்கென்று ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு தேர்வுத்துறை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. விண்ணப்பிக்க விரும்புவோர் ஜனவரி 21 மற்றும் 22ம் தேதிகளில் இந்த மையங்களில் ஆன்லைன் மூலம் பதிவு செய்துக்கொள்ளலாம்.  இது குறித்து மேலும் விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று தேர்வுத்துறை செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.