பற்றி எரியும் கேரளம்

பற்றி எரியும் கேரளம்

சபரிமலைக்கு எல்லா வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை நடைமுறை படுத்தும் விதமாக நேற்று 50 வயதுகுட்பட்ட 2  பெண்களை கேரள அரசு ரகசியமாக போலீஸ் பாதுகாப்புடன் சாமி தரிசனம் செய்ய வைத்தது. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதனால், கேரளாவிலும் தமிழகத்திலும் பதற்ற நிலை காணப்படுகிறது. 

கேரளாவில் சபரிமலை கர்ம சமிதி என்ற அமைப்பு இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. இன்று முழு அடைப்பு போராட்டமும் பேரணியும் நடைபெற்று வரும் சூழ்நிலையில் அங்கு கல்வீச்சு சம்பவங்கள் நடைபெற்றன. அதனால், கேரளாவிற்கு செல்லும் பேருந்துகள் தமிழக எல்லையிலேயே நிறுத்தப்பட்டுள்ளன. 

50 வயதுகுட்பட்ட இரண்டு பெண்கள் நேற்று சாமி தரிசனம் செய்ததை அடுத்து சபரிமலை கோவில் நடை சாத்தப்பட்டு சுத்தி பூஜை செய்யப்பட்டு பின்பு நடை மீண்டும் திறக்கப்பட்டது. சுத்தி பூஜை செய்த சபரிமலை தந்திரிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.