பள்ளிக்கு வராத ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்

பள்ளிக்கு வராத ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்

ஜாக்டோ-ஜியோ அமைப்பின் மூலம் போராட்டம் நடத்திவரும் அரசு ஊழியர்களுக்கும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. இன்றைக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று ஏற்கனவே அவர்களுக்கு நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது. இப்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் விளக்கமளிக்க பள்ளிக்கல்வித்துறை 17.பி பிரிவின் கீழ் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் மாதம் ரூ.7,500 சம்பளத்தில் தற்காலிக ஆசிரியர்களை உடனடியாக நியமிக்கும்படி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு  பள்ளிக்கல்வித்துறை உத்திரவிட்டுள்ளது.