பழிவாங்குவோம் - ராஜ்நாத் சிங் உறுதி

பழிவாங்குவோம் - ராஜ்நாத் சிங் உறுதி

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலுக்கு பழிவாங்கவோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதியளித்துள்ளார்.

இது குறித்து ராஜ்நாத் சிங் கூறியதாவது : புல்வாமாவில் சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல் வேதனையையும், வருத்தத்தையும் தருகிறது. நாட்டுக்கான சேவையின்போது உயிர்நீத்த வீரர்கள் ஒவ்வொருவருக்கும் தலை வணங்குகிறேன்.  பாகிஸ்தானின் ஆதரவு மற்றும் நிதியுதவி மூலம் நிகழ்த்தப்படும் இதுபோன்ற பயங்கரவாத தாக்குதலால், நாட்டின் அமைதியை சீர்குலைக்க விரும்புவோரின் திட்டங்களை முறியடிக்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது.  இந்த பயங்கரவாத தாக்குதலை ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்புதான் நிகழ்த்தியுள்ளது. இதற்கு பழிவாங்குவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்கும் என்று நாட்டு மக்களுக்கு உறுதியளிக்கிறேன்.