பழைய பெயருக்கு மாற தயாராகும் நகரங்கள்

பழைய பெயருக்கு மாற தயாராகும் நகரங்கள்

சமீபத்தில் அலகாபாத் நகரின் பெயரை பிரயாக் ராஜ் என்றும், பைசாபாத் மாவட்டத்தை அயோத்தியா என்றும் பழைய பெயர்களுக்கு மாற்றியது உத்திரபிரதேச அரசு. இதே போல, ஹிமாசல பிரதேசத்தின் தலைநகரான சிம்லாவின் பெயரை சியாமலா என்று மாற்ற பரிசீலிக்கப்பட்டு வருகிறது. 

இவற்றை தொடந்து குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் நகரின் பெயரை அதன் பழைய பெயரான கர்ணாவதி என்று மாற்ற குஜராத் அரசு முடிவு செய்துள்ளது. 

இப்போது, தேர்தல் நடைபெற உள்ள தெலுங்கானா மாநிலத்தில் பாஜக வெற்றி பெற்றால் ஹைதிராபாத் நகரின் பெயர் அதன் பழைய பெயரான பாக்கியநகர் என்று மாற்றப்படும் என்று பாஜகவின் தெலுங்கானா தலைவர்களுள் ஒருவரான ராஜா சிங் தெரிவித்துள்ளார்.

இதை தொடர்ந்து மஹாராஷ்டிரத்தில் ஔரங்காபாத் நகரின் பெயரை சாம்பாஜி நகர் என்றும் உஸ்மானாபாத் நகரின் பெயரை தாராஷிவ் நகர் என்றும் மாற்றவேண்டும் என்று அந்த மாநிலத்தில் ஆளும் கூட்டணியில் உள்ள சிவ சேனா கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.