பாகிஸ்தானியராக மாறிய காங்கிரஸ் கட்சியினர்

பாகிஸ்தானியராக மாறிய காங்கிரஸ் கட்சியினர்

புல்வாமா தாக்குதலுக்கு பின்னர், மத்திய அரசு நடத்திய துல்லிய தாக்குதலுக்கு பின்னர், காங்கிரஸ் கட்சியினர் பாகிஸ்தானியராகவே மாறி கேள்விகளை எழுப்பப தொடங்கியுள்ளார்கள்.   துல்லிய தாக்குதலுக்குறிய ஆதராங்களை காட்ட முடியுமா?  கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை எவ்வாறு கணக்கிடப்பட்டது?  பாகிஸ்தானியர் கேள்வி கேட்பது போல், காங்கிரஸ் கட்சியினர் கேள்விகளை எழுப்புகிறார்கள்.   சில தினங்களுக்கு முன் காங்கிரஸ் கட்சியின் வெளிநாட்டு இந்தியர்கள் பிரிவின் தலைவரும், ராகுல் காந்தியின் நெருங்கிய நன்பருமான சாம் பிட்ரட்டோ வெளியிட்டுள்ள கருத்து, காங்கிரஸ் கட்சியினர் இந்தியர் என்பதற்கு பதிலாக பாகிஸ்தானியர் என கூறும் விதத்தில்  அமைந்துள்ளது.

          2008 நவம்பர் மாதம் 26ந் தேதி மும்பையில் நடந்த வெடி குண்டு தாக்குதலுக்கும், புல்வாமாவில் பாதுகாப்பு படையினர் மீது நடத்திய தாக்குதலுக்கும் பாகிஸ்தானை குற்றவாளியாக கருத கூடாது என்று டுவிட்டரில் பதிய விட்டுள்ளார். ( entire Pakistan can’t be blamed for 26/11 and Pulwama terror attacks ) .  இவ்வளவு கீழ்தரமாக விமர்சனம் செய்துள்ளது கண்டிக்க தக்கது மட்டுமில்லாமல், தேச அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட வேண்டும்.  இது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய போது, it was not right to punish Pakistan because of a fes terrorists, “ Eight people comes and  do something, you don’t Jump on entire nation ( Pakistan) .  Naïve to assume that just because some people came here and attacked, every citizen of that nation is to be blamed.  I don’t believe in that way.  என விமர்ச்சித்து வியப்பை அளிக்கிறது.    வெளிப்படையாக பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்துக்களை கூறுவது,  இவர்களின் தேச பற்றை சந்தேகத்திற்கு இடமளிக்கிறது.

                இந்திய ஊடகங்களில் வந்த செய்திகளின் மீது திருவாளர் சாம் பிட்ரட்டோவிற்கு நம்பிக்கை கிடையாது.   உலக ஊடகங்கள் குறிப்பாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையில் வந்த செய்தியை முன் வைத்து கேள்வி கனைகளை எழுப்புகிறார்.  ஆனால் அமெரிக்க ஊடகங்கள் செய்தியை திரித்து கூறுவதற்குறிய காரணத்தை தெரிந்து கொள்ள வேண்டும்.   ஒரு பாகிஸ்தானியர் எவ்வாறு கேள்விகளை கேட்பாரோ அதே போல் கேள்விகளை கேட்கிறார்.   I would like to know a little more because I read reports in the New York Times and other newspapers. Did we really attack? We really killed 300 people? I don’t know that. As a citizen, I am entitled to know and if I ask it is my duty to ask, that doesn’t mean I’m not a nationalist, That doesn’t mean I am on this side or that side. We need to know the facts. If you say 300 people were killed, I need to know that,”     என செய்தியாளர்களிடம் கேள்விகளை எழுப்பியுள்ளார்.   தான் ஒரு இந்திய பிரஜை என்ற முறையில் கேள்விகள் கேட்க உரிமை உண்டு என கூறுகிறார்

          இது போன்ற கேள்விகளை ஐ.மு.கூ. ஆட்சியில் துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்பட்டதே,  இது போன்ற கேள்விகளை ஏன் எழுப்பவில்லை.   ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற சட்ட மன்ற தேர்தலின் போது, திருவாளர் ராகுல் காந்தி உதயபூரில் நடந்த பொதுக் கூட்டத்தில், மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது மூன்று முறை துல்லிய தாக்குதல்கள் நடத்தப்பட்டன என்றார்.  ஆனால் இவரது கருத்துக்கு மாறாக  காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 8 முறை துல்லிய தாக்குதல்கள் நடத்தப்பட்டன என்றார்.  கட்சியின் தலைவரின் எண்ணிக்கைக்கும், செய்தி தொடர்பாளர் எண்ணிக்கைக்கும் முரன்பாடு உள்ளது என்பதை பற்றி எவரும் கலைவப்படவில்லை.    இதே காலக் கட்டத்தில் ராணுவ அமைச்சர் ஏ.கே. அந்தோனி ஒரு நிகழ்ச்சியில் கூறும் போது,  பாகிஸ்தானின் எல்லை தாணடிய தாக்குதல்களை இந்திய ராணுவமும் எல்லை தாண்டி தாக்கியுள்ளது என்று கூறினாரே தவிர துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறவில்லை.

          காங்கிரஸ் கட்சியில் உள்ள இஸ்லாமியர்களில் பலர் பாகிஸ்தான் விசுவாசிகளாகவே மாறியுள்ளார்கள்.  பாகிஸ்தான் நடத்திய நாடகத்தை போலவே, இவர்களும் இங்கு நடத்துகிறார்கள்.   பிப்ரவரி 26ந் தேதி தாக்குதல் நடத்தியவுடன், பாகிஸ்தான் மறுத்தது, வான்வெளியிலேயே இந்திய விமானப் படை விமானங்களை மறித்து திருப்பி விட்டோம் என்றார்கள்.   மறுதினமே இந்திய விமான படையினர் தாக்குதல் நடத்தினார்கள், இந்த தாக்குதல் ஆள் நடமாட்டமில்லா பகுதியில் நடைபெற்றது என்றும்,  பார்வையிட சர்வதேச ஊடகங்களுக்கு அனுமதி அளிப்பதாக தெரிவித்தார்கள்.  இதில் தோஹாவை தலைமையிடமாக கொண்டுள்ள  AL Jazeera என்ற பத்திரிக்கையின் பாகிஸ்தான் நிருபர் மட்டுமே சென்றார்.   இவரது கருத்தின் படி, இந்திய விமான படை தாக்குதல் நடத்தியது, நடந்த இடமான பாலகோட் பகுதியில் ஜெய்ஷ்-இ-முகமது வின் பயிற்சி முகாம் அமைந்துள்ள மதரஸா இருந்த இடத்திற்கு செல்ல அனுமதிக்கவில்லை என்றார்.

          காஷ்மீர் மாநில காங்கிரஸ் கட்சியின்  சிறுபானமை பிரிவின் தலைவராக இருக்கும்  Haji Saqheer Saeed Khan             விடுத்துள்ள அறிக்கையில், மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தவுடன், தீவிரவாதத்தில் பலியான இஸ்லாமியர்களின் குடும்பத்திற்கு நஷ்டஈடாக ரூ1கோடியும், அரசு வேலை வாய்ப்பு வழங்கப்படும்.  இது அப்பட்டமான இஸ்லாமிய வாக்கு வங்கி அரசியல்.  இது பற்றி எந்த மதசார்பற்ற கட்சியினரும் கண்டனம் தெரிவிக்கவில்லை.  திருவாளர் ராகுல் காந்தி வாய் திறக்கவில்லை.  எனவே காங்கிரஸ் கட்சியில் உள்ள ஒவ்வொரு இஸ்லாமியனும், தன்னை பாகிஸ்தானியாரகவே கருதுகிறார்கள் என்பதற்கு இதுவே சாட்சியாகும்.

                தாக்குதலைப் பற்றி கேள்விகள் எழுப்புகின்ற காங்கிரஸ் கட்சியினர், ஒரு சம்பவத்தை மறந்து விட்டு, மோடி மீது குற்றம் சுமத்துகின்றனர்.  தாக்குதல் நடைபெற்றதும், பயங்கரவாத அமைப்பினர் பலர் கொல்லப்பட்டதும் உண்மை என்பதற்கு, ஜெய்ஷ்-இ-முகமது வின் முகமது அஸார் கூறியதை நினைவுப்படுத்தி பார்க்க வேண்டும்.  மசூத் அஸாரின் சகோதரர்  Abdul Rauf Rasheed Alvi விடுத்துள்ள செய்தியில், பால்கோட் பகுதியில் ஜெய்ஷ்-இ-முகமதுவின் பயிற்சி முகாம் மீது தாக்குதல் நடத்தி பலர் கொல்ல காரணமான இந்திய விமான படை தாக்குதலுக்கு பலிக்கு பலி வாங்க பயங்கரவாத தாக்குதலை நடத்துவோம் என குறிப்பிட்டுள்ளதை சற்றே நினைவுப்படுத்தி பார்க்க வேண்டும். 

- ஈரோடு சரவணன்