பாகிஸ்தானில் குண்டு போட்டால் எழும்பூரில் சிலருக்கு வயிறு எரிகிறது

பாகிஸ்தானில் குண்டு போட்டால் எழும்பூரில் சிலருக்கு வயிறு எரிகிறது

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய விமானப்படை பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகள் முகாம் மீது குண்டு போட்டதை, சென்னை கோமளீஸ்வரன் பேட்டையில் பட்டாசு வெடித்து கொண்டாடியதற்காக வழக்கு போடுவதாக காவல் நிலையத்திற்கு நேற்று வரச் சொன்ன எழும்பூர் காவல் ஆய்வாளர்.அதன் பேரில் காவல் நிலையம் சென்ற நமது சகோதரர்களை மரியாதை குறைவாகவும், வாடா,போடா என்றும்,சட்டையை பிடித்து இழுத்தும் உங்களையும்,உடன் வந்த அத்தனை பேரையும் ரிமாண்ட் பன்னி விடுவேன் என்று காவல் ஆய்வாளர் எல்லை மீறி உள்ளார். உடன் சாதாரண உடையில் இருந்த ராமையா என்கிற போலிஸ் டிரைவர் எவனோ எங்கோ குண்டு போட்டா இங்கே ஏண்டா கொண்டாடுறிங்க? உங்க வீட்டில் கொண்டாடுங்க என்றும் இராணுவத்தை கேவலமாக பேசி உள்ளார்.

இந்த விவரம் தெரிந்தவுடன் நேரில் காவல் நிலையம் சென்று சட்டப்படி வழக்கை சந்திக்க தயார் எனக்கூறி நமது சகோதரர்களை அழைத்து வந்தோம்.

இன்று திருவல்லிக்கேணி துணை ஆணையாளர் திரு.சுகுணாசிங் அவர்களிடம் ஆய்வாளர் மற்றும் டிரைவர் ராமையா மீது புகார் கொடுக்கப்பட்டது என்கிறார் ஹிந்து முன்னணி மாநகர தலைவர் இளங்கோவன்.

எல்லாம் சரி, காவல்துறை யாருக்காக வேலை செய்கிறது. நாட்டை பாதுகாக்கவா ? அல்லது மாமுல் நண்பர்களுக்காகவா