பாகிஸ்தானில் மத வெறியர்களால்  சீக்கிய சிறுமி கட்டாய மதமாற்றம்

பாகிஸ்தானில் மத வெறியர்களால் சீக்கிய சிறுமி கட்டாய மதமாற்றம்

பாகிஸ்தானின் லாகூர் நங்கனா சாகிப் பகுதியில் உள்ள சீக்கிய குருத்வாரா தலைவரின் 19 வயது மகளை கடந்த சில தினங்களுக்கு முன்பு, அப்பகுதியைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர்கள் சிலர் கடத்திச் சென்றுள்ளனர். பின்னர், கடத்தப்பட்ட சிறுமியை துப்பாக்கி முனையில் மிரட்டி கட்டாயப்படுத்தி, முஸ்லிம் மதத்திற்கு மாற்றியுள்ளனர். அதன்பிறகு முஸ்லிம் ஒருவருக்கு அந்த சிறுமியை கட்டாய திருமணம் செய்து வைத்துள்ளனர்.

இது தொடர்பாக அவரது பெற்றோர் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதற்கிடையே, காவல் நிலையத்தில் கொடுத்த புகாரை வாபஸ் பெறும்படி அந்த முஸ்லிம் கும்பல் அந்த சிறுமியின் பெற்றோரை மிரட்டுவருகிறது.

இந்த சம்பவம் பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மையான சீக்கியர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தானில் சிறுபான்மையாக உள்ள இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவ பெண்களை கடத்தி, கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்து, முஸ்லிம் ஆண்களுக்கு திருமணம் செய்து வைப்பது தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.