பாகிஸ்தானில் மற்றொரு சீக்கிய சிறுமி கட்டாய மத மாற்றம்

பாகிஸ்தானில் மற்றொரு சீக்கிய சிறுமி கட்டாய மத மாற்றம்

பாகிஸ்தானில் ஹிந்துக்கள், கிறித்தவர்கள் மற்றும் சீக்கியர்கள் போன்ற சிறுபான்மையினர் மீது மதவெறியர்களால் தாக்குதல் தொடுப்பது தொடர் கதையாகிவியிட்டது.  அதன் ஒரு பகுதியாக சீக்கிய சிறுமிகளை கடத்திச்சென்று கட்டாய மதம் மாற்றம் செய்து திருமணம் செய்துகொள்கின்றனர். சமீபத்தில்தான் மதவெறியர்களிடம் இருந்து ஒரு சீக்கிய சிறுமி மீட்கப்பட்டால் இப்போது மீண்டும் நன்கணா நகரத்தில் இருந்து பத்தொன்பது வயது சிறுமி கடத்தப்பட்டு கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இத்தகைய மத தாக்குதல்களால் சிறுபான்மையின மக்கள் தொடர் அச்சத்தில் உள்ளனர், இது தொடர்பாக அவ்வப்போது போராட்டங்களும் நடைபெற்றுள்ளன. காஷ்மீர் மக்கள்  பற்றி  கவலை கொள்ளும் இம்ரான் கான் சொந்தநாட்டு மக்களை எப்போது பார்ப்பார் என்பது கேள்விக்குறியே!