பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கட்டாய மதமாற்றம் - சுஷ்மா ஸ்வராஜ்

பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கட்டாய மதமாற்றம் - சுஷ்மா ஸ்வராஜ்

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் 13 மற்றும் 15 வயது கொண்ட இரு ஹிந்து சிறுமிகள் ஹோலி தினத்தன்று கடத்தப்பட்டு, வலுக்கட்டாயமாக முஸ்லிம் மதத்துக்கு மாற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த நாட்டு ஹிந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த செய்தி குறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கவலை தெரிவித்துள்ளார். 

இதையடுத்து வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் "பாகிஸ்தானில் ஹோலி பண்டிகையின்போது 2 ஹிந்து சிறுமிகள் கடத்தப்பட்டு மதம் மாற்றப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் குறித்து, அங்குள்ள இந்தியத் தூதரிடம் விளக்கம் கேட்டுள்ளேன்" என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு பாகிஸ்தான் தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் ஃபாவத் ஹுசைன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். "ஹிந்து சிறுமிகள் மதமாற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்படுவது பாகிஸ்தானின் உள்நாட்டுப் பிரச்னையாகும். அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் இந்தியாவிலுள்ள சிறுபான்மையினரைப் பற்றி கவலைப்பட்டால் போதும்' என்று குறிப்பிட்டுள்ளார். 

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சுஷ்மா ஸ்வராஜ் வெளியிட்டுள்ள சுட்டுரைப் பதிவில், "சிறுபான்மையினர் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டதாக வெளியான செய்தி குறித்து விளக்கம் மட்டும்தான் கேட்டேன். இந்தக் கேள்வியைக் கண்டு பாகிஸ்தான் அமைச்சர் அஞ்சுவது, அவர்களது குற்ற உணர்ச்சியைக் காட்டுகிறது' என்று விமர்சித்துள்ளார்.