பாகிஸ்தானுடன் இனி பேச்சு இல்லை

பாகிஸ்தானுடன் இனி பேச்சு இல்லை

அமைதிப்பேச்சுவார்த்தை நடத்துவதற்கான காலம் முடிந்து விட்டது என பிரதமர் திரு நரேந்திர மோடி கூறினார்.

அதைத் தொடர்ந்து, மோடியும், மேக்ரியும் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டனர். பயங்கரவாதத்துக்கு எதிரான உறுதிமொழி என்ற பெயரில் வெளியிடப்பட்ட அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: உலக அமைதிக்கும், அரசியல் ஸ்திரத்தன்மைக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக பயங்கரவாதம் உள்ளது. பயங்கரவாதத்துக்கு எதிராக சர்வதேச சமூகம் ஒருங்கிணைந்து உறுதியான நடவடிக்கையை எடுக்க வேண்டியது அவசியம். எல்லை தாண்டிய பயங்கரவாதச் செயல்களை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது. பயங்கரவாதம் எந்த வடிவில் வந்தாலும் அதை வேரறுப்பதில் இந்தியாவும், ஆர்ஜென்டீனாவும் உறுதியுடன் உள்ளன. பயங்கரவாதிகளுக்கும், பயங்கரவாத அமைப்புகளுக்கும் எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும், அவர்களுக்கு நிதியுதவி, புகலிடம் அளித்து ஊக்குவிப்போருக்கு எதிராகவும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

பயங்கரவாதிகளின் புகலிடம் உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும், அது அழிக்கப்பட வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.