பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் புறக்கணிப்பு

பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் புறக்கணிப்பு

பாகிஸ்தான் உடனான கிரிக்கெட் தொடர் புறக்கணிப்புக்கு இந்தியாவின் தூண்டுதல் காரணம் அல்ல என இலங்கை விளையாட்டு அமைச்சர் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.  பாகிஸ்தான் கிரிக்கெட் தொடரை இலங்கை வீரர்கள் புறக்கணிப்பதற்கு இந்தியாவின் அழுத்தமே காரணம் என பாகிஸ்தான் அமைச்சர் கருத்து தெரிவித்து இருந்தார்.

இதற்க்கு பதில் அளித்த பெர்னாண்டோ  பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாகவே வீரர்கள் தொடரை புறக்கணித்துள்ளனர். இதற்கும் இந்தியாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என கூறினார்.  

2008 ஆம் ஆண்டு இலங்கை வீரர்கள் பாகிஸ்தானில் பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டபின் எந்த நாடும் பாக்கிஸ்தான் சென்று கிரிக்கெட் விளையாட தயாராக இல்லை.