பாகிஸ்தான் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்திய இந்திய விமானப்படைக்கு வாழ்த்து

பாகிஸ்தான் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்திய இந்திய விமானப்படைக்கு வாழ்த்து

நாகர்கோவில் ராமசாமி அய்யர் நினைவு பூங்காவில் ராணுவத்தின் "மிக் 21' போர் விமானம் பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த விமானம் போரின் போதும், போர் பயிற்சிக்காவும் பயன்படுத்தக்கூடியது. 1965-ல் பாகிஸ்தான் போரிலும், 1971-ல் வங்க தேசத்துடனான போரிலும் பயன்படுத்தப்பட்டது. ஒரு மணி நேரத்தில் 2175 கி.மீ., தூரம் கடக்கும் திறன் கொண்டது. 43 ஆயிரம் அடி உயரத்தில் பறக்க கூடியது. இந்த போர் விமானம் முன்பு தேச பக்த இளைஞர் இயக்கம் சார்பில் வெற்றி கொண்டாட்டம் நடை பெற்றது.இதில் நாஞ்சில் ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

- கண்ணன்