பாக். பயங்கரவாத முகாம்களை அழிக்க வேண்டும் - விஹெச்பி

பாக். பயங்கரவாத முகாம்களை அழிக்க வேண்டும் - விஹெச்பி

ஜம்மு-காஷ்மீரில் சிஆர்பிஎஃப் வீரர்கள் மீதான தற்கொலைப் படை தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு, பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத முகாம்களை முற்றிலும் அழிக்க வேண்டும் என வலியுறுத்தியது.

இதுகுறித்து விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சர்வதேச செயல் தலைவர் அலோக் குமார் வெள்ளிக்கிழமை கூறியதாவது: மதத்தின் பெயரால் நிகழ்த்தப்படும் கொலை சம்பவங்களுக்கு எதிராக இளைஞர்கள் அணி திரள வேண்டிய தருணம் வந்து விட்டது. இந்த தாக்குதலை நிகழ்த்தியுள்ள ஜெய்ஷ்-ஏ-முகமது இயக்கம் பாகிஸ்தானை மையமாக கொண்டு இயங்கி வரும் பயங்கரவாத அமைப்பு. பயங்கரவாதிகளுடனான பாகிஸ்தானின் உறவு, அந்நாட்டின் அழிவுக்கே வழி வகுக்கும். இந்திய அரசு தயக்கமின்றியும், உறுதியாகவும், திறம்படவும் செயல்பட்டு இந்த பயங்கரவாத இயக்கத்தை முழுமையாக அழித்தொழிக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு என்றார் அவர்.