பாஜகவின் ஆதரவால்  யானை பலம் கிடைத்துள்ளது - நடிகை சுமலதா

பாஜகவின் ஆதரவால் யானை பலம் கிடைத்துள்ளது - நடிகை சுமலதா

மண்டியா மக்களவைத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் தனக்கு பாஜக ஆதரவு அளித்துள்ளது, எனக்கு யானை பலம் கிடைத்தது போல உள்ளது. இது தொடர்பாகபாஜக தலைவர்களைச் சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளேன். மக்களவைத் தேர்தலில் எனது போராட்டத்தைத் தொடர்வேன். எனது போராட்டத்துக்கு மண்டியா மக்களின் ஆதரவு, ஒத்துழைப்பு உள்ளது. 

மண்டியா மக்கள், அம்பரீஷ் ஆதரவாளர்களின் உதவியால் தேர்தலில் போட்டியிடுகிறேன். தேர்தலில் யாருக்கு எதிராகப் போட்டியிடுகிறேன் என்ற தெளிவு இருக்கிறது. அது பெரும் சவாலானதுஎன்பதையும் அறிந்துள்ளேன். தேர்தலில் ஆதரவு அளிக்கும்படி மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளேன். தனிப்பட்டமுறையில் எனக்கு எவ்வளவு தொந்தரவு ஏற்பட்டாலும், மண்டியா மக்களின் நலனுக்காக அவற்றை சகித்துக் கொள்வேன். மண்டியா மக்களின் வளமான எதிர்காலத்துக்காக அமைதியான முறையில் தேர்தலைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளேன் என்று மண்டியா மக்களவை தொகுதி சுயேச்சை வேட்பாளரும், நடிகையுமான சுமலதா கூறினார்.