பாஜகவுக்கு ஆதரவு - டெல்லியில் திரண்ட நட்சத்திர பட்டாளம்

பாஜகவுக்கு ஆதரவு - டெல்லியில் திரண்ட நட்சத்திர பட்டாளம்

மத்தியில் மீண்டும் பாஜக அரசு அமைய வேண்டும். மோடி மீண்டும் பிரதமராக அமர வேண்டும் என்று ஆதரவு தெரிப்பதற்காக பாலிவுட் திரை பிரபலங்கள் டெல்லியில் இன்று கலந்துரையாடல் நடத்தினர். 

மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு இந்த பாராளுமன்ற தேர்தலில் திரையுலக பிரமுகர்களின் ஆதரவு அதிகமாக கிடைத்துள்ளது. விவேக் ஓபராய் உள்ளிட்ட சில பெரிய நடிகர்கள் வெளிப்படையாக பாஜகவுக்கு பிரசாரம் செய்து வருகின்றனர். 

சன்னி டியோல் உள்ளிட்ட நடிகர்களுக்கு தேர்தலில் போட்டியிடவும் பாஜக வாய்ப்பளித்துள்ளது. இந்நிலையில், மத்தியில் மீண்டும் பாஜக அரசு அமைய வேண்டும். மோடி மீண்டும் பிரதமராக அமர வேண்டும் என்று ஆதரவு தெரிப்பதற்காக பாலிவுட் திரை பிரபலங்கள் பலர் டெல்லியில் இன்று கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றை நடத்தினர்.

மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் மற்றும் பாஜக மேலிட தலைவர்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர், மனோஜ் ஜோஷி, மல்யுத்த வீரர் ‘தி கிரேட் காலி’, ஜெயப்பிரதா, பூனம் தில்லான் உள்ளிட்ட நடிகர், நடிகையர் கலந்து கொண்டனர்.