பாஜகவுக்கு முஸ்லிம் பெண்கள் அதிக அளவில் வாக்களிப்பார்கள்

பாஜகவுக்கு முஸ்லிம் பெண்கள் அதிக அளவில் வாக்களிப்பார்கள்

முத்தலாக் நடைமுறைக்கு எதிரான அவசரச் சட்டத்துக்கு முஸ்லிம் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. எனவே, இத்தேர்தலில் பாஜகவுக்கு முஸ்லிம் பெண்கள் அதிக அளவில் வாக்களிப்பார்கள் என்று பாஜக சிறுபான்மையினர் பிரிவு தேசிய துணைத் தலைவர் முனவரி பேகம் தெரிவித்தார்.

மற்ற கட்சிகளை ஒப்பிடும்போது பாஜக வில் சிறுபான்மையினர் மிகவும் மரியாதையாக நடத்தப்படுகின்றனர். உலகில் உள்ள 63 இஸ்லாமிய நாடுகளில் பாகிஸ்தான் உட்பட 28 நாடுகளில் முத்தலாக் நடைமுறை இல்லை. இந்தியாவில் முத்தலாக் நடைமுறைக்கு எதிரான அவசரச் சட்டத்துக்கு முஸ்லிம் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. எனவே, இத்தேர்தலில் பாஜகவுக்கு முஸ்லிம் பெண்கள் அதிக அளவில் வாக்களிப்பார்கள் என்று பாஜக சிறுபான்மையினர் பிரிவு தேசிய துணைத் தலைவர் முனவரி பேகம் கூறினார்.