பாஜக அனைவருக்குமான கட்சி மக்களுக்காக உழைக்கிறோம்

பாஜக அனைவருக்குமான கட்சி மக்களுக்காக உழைக்கிறோம்

தேர்தல் சமயத்தில் வேலைப்பளு நிறைந்திருக்கும் போதும், தாங்கள் ஓய்வில்லாமல், உற்சாகமாக பணியாற்றி வருகிறீர்கள். ஓய்வில்லா உழைப்பை அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமாவும் பாராட்டி உள்ளார். இடைவெளி இல்லாமல் பணியாற்ற தங்களுக்கு, எங்கிருந்து சக்தி கிடைக்கிறது?

     நமது சமூகத்தில் உள்ள சராசரி மனிதனின் அன்றாட உழைப்பை நான் உற்று நோக்குகிறேன். அது மட்டுமல்லாமல் வெயில், பனி, பாலைவனம் என பாராமல் காவல் காக்கும் ராணுவ வீரர்கள், தீபாவளி, ராக்கி உள்ளிட்ட பண்டிகைகளில் பணியாற்றும் காவல்துறையினர், இரவு-பகல் பாராது உழைக்கும் விவசாயிகள் நாட்டிற்காக அரும் பணியாற்றுகின்றனர். இவர்களை பார்த்துதான், என்னால் முடிந்த அளவு, உழைக்க வேண்டும் என எண்ணி அதன்படி செயல்படுகிறேன். இது எனது கடமையே, நாட்டு மக்கள் எனக்கு அளிந்திருக்கும் பொறுப்பை உணர்ந்து அவர்களுக்காக நான் ஒவ்வொரு மணித்துளியையும் வீணாக்காமல் ஓடிக் கொண்டிருக்கிறேன்.

 

 தென்னிந்தியாவில் போட்டியிடாதது ஏன் ? ராகுல்காந்தி, அமேதி, வயநாடு என இரு தொகுதிகளில் போட்டியிடுகின்றார். வடஇந்தியாவை போன்றே, தென்னிந்தியாவிற்கு முக்கியத்துவம் அளிக்கவே, வயநாட்டில் போட்டியிடுவதாக ராகுல் குறிப்பிட்டு உள்ளார். இது போல் பிரதமரும் தென்பகுதியில் போட்டியிட வேண்டும் என பா..கவில் ஏதேனும் ஆலோசனைகள் கூறப்பட்டதா, விவாதிக்கப்பட்டதா? கடந்த முறை நீங்கள் 2 தொகுதிகளில் போட்டியிட்டீர்களே ?

      ஸ்மிரிதி இரானி அமேதியில் வேட்பு மனு தாக்கல் செய்த காட்சிகளை பார்த்தாலே தெரிந்து இருக்கும். அவர் (ராகுல் காந்தி) ஏன் வேறு ஒரு தொகுதியை நாடிச் சென்றார் என்று. அரசியலுக்காக ஏதேனும் ஒரு காரணத்தை கூறலாம். ஆனால், பாதுகாப்பு கருதியே, அவர் வேறு ஒரு தொகுதியை தேர்ந்தெடுத்திருக்கலாம். காங்கிரஸ் ஆளும் பஞ்சாப், சத்தீஷ்கார், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், புதுச்சேரி மாநிலங்களை அவர் தேர்வு செய்யவில்லை. கேரளாவை  அவர் தேர்வு செய்ததால்தான் அனைவரின் மனதிலும் இந்த கேள்வி எழுகிறது. எனது முடிவை எப்போதும் நான் எடுப்பதில்லை. கட்சியின் முடிவுக்கு நான் கட்டுப்படுகிறேன். தேவையில்லாமல் யோசித்து நான் குழப்பி கொள்ள விரும்பவில்லை.

 

 பா..க வடமாநில கட்சியா கர்நாடகம் தவிர தென்னிந்தியாவை பொறுத்தவரை, பா... வெற்றி பெற ஏன் சிரமப்படுகிறது ?

      இது முற்றிலும் மாறுபட்ட கருத்து. பா... வட மாநிலத்தைச் சார்ந்த கட்சி என்றனர். பிறகு நகர்ப்புறவாசிகளுக்கான கட்சி என்றனர். பின்னர் உயர்வகுப்பினருக்கான கட்சி என்றனர். ஆனால் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட பிரிவுகளைச் சார்ந்தவர்கள் தான் பா... எம்.பி.க்களாக உள்ளனர். நாட்டின் பல்வேறு இடங்களில் எங்களது கட்சியினரே எம்.ஏல்..க்களாக உள்ளனர். நகர்ப்புற கட்சி என்றனர். ஆனால் கிராமங்களிலும் வெற்றி வாகை சூடி, பஞ்சாயத்துகளை கைப்பற்றினோம். வடமாநில கட்சி என்றனர். ஆனால் குஜராத், மராட்டியம், கோவா, கர்நாடகம் இவை அனைத்தும் வடக்கு பகுதியை சார்ந்தது அல்ல. ஆந்திராவிலும் எங்கள் ஆதரவில் ஆட்சி நடைபெற்றது. தமிழகத்தில் நாங்கள் இல்லை என கூற முடியாது.

 

 மக்களவை தேர்தலில் போட்டியிட கூட்டணிக்காக தி.மு..வை தவிர்த்து, .தி.மு.கவை தேர்வு செய்தது ஏன் ?

      .தி.மு.கவுடன் எங்களுக்கு நீண்ட கால நட்பு உள்ளது. நாடாளுமன்றத்திலும் எங்களுக்கு பூரண ஆதரவை தந்த கட்சி அ.தி.மு..

 

 ஆனால் ஒரு சில கட்சிகள், .தி.மு..வை கூட்டணிக்காக நிர்ப்பந்தப்படுத்தியதாக குற்றம் சாட்டுகின்றனரே ?

      அரசியலில் யாரையும் யாரும் கட்டாயப்படுத்த முடியாது. கட்டாயப்படுத்தவும் பா...வுக்கு தெரியாது. அது எங்களுக்கு தேவையும் இல்லை. இது தான் உண்மை. ஆனால் பா...வுடன், ஜெயலலிதா பாராட்டி வந்த நட்பு குறித்து அனைவரும் அறிவர். 

 தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைத்தால், .தி.மு.. அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகளை சி.பி.. விசாரிக்குமாஅதன் நிலை என்னவாகும் ?

     நரேந்திர மோடி மீதே குற்றச்சாட்டு எழுந்ததாலும் அவர் முழுமையாக விசாரிக்கப்படுவார். விசாரணையில் இருந்து யாரும் தப்ப முடியாது.

 

 ஜி.எஸ்.டி. வரி

    ஜி.எஸ்.டி. வரி அமலாக்கப்பட்ட பிறகு, அதிக அளவிலான வரி செலுத்துவதாக, புகார் தெரிவித்து உள்ளனர். ஹிதனால் விலைவாசியும் உயர்ந்துள்ளதாக கூறுகின்றனரே ?

     இதில் உண்மை இல்லை. ஜி.எஸ்.டி. வரிக்கு முன்பு சோதனைச்சாவடிகளில் (செக்போஸ்ட்) தலா இரண்டாயிரம் கோடி ரூபாய் அளவிற்கு, செலவானது. தற்போது அவை நீக்கப்பட்டதும் அத்தொகை நாட்டு மக்களின் நன்மைக்காக செலவிடப்பட்டுகிறது.

 

 கேள்வி : ஜி.எஸ்.டி. வரியால், வியாபாரிகள், நிறுவனங்கள் மட்டுமே பயனடைவதாக கூறுகின்றனர். சாமானிய மக்களுக்கு  இதனால் பலன் இல்லை என்றும் கூறப்படுகிறதே ?

 

 பதில் :   இதில் உண்மை இல்லை. உணவகம் போன்ற இடங்களில் 33 சதவீதமாக இருந்த ஜி.எஸ்.டி. வரி 5 சதவீதமாக குறைந்து உள்ளது. சாமான்ய மக்களும் பயன் அடைகின்றனர். இதன் விவரங்களை நான் உங்களுக்கு அளிக்கிறேன்.

 

 கேள்வி மத்திய பா... அரசின், பண மதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜி.எஸ்.டி. வரி அமல்படுத்தப்பட்டதால், தொழில்கள் முடக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் கூறுகின்றனர். அவர்கள் சொல்வது சரிதானா ?

 

 பதில் : கடந்த 1992-ம் ஆண்டு, மன்மோகன் சிங் நிதி மந்திரியாகவும், நரசிம்மராவ் பிரதமராகவும் இருந்த போது நாட்டின் உள்நாட்டு வளர்ச்சி 2 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தது. ஆனால் பா... ஆட்சிக்கு பிறகு, பொருளாதார வளர்ச்சி அடையும் நாடுகளில் இந்திய முதல் இடத்தில் உள்ளது. சுதந்திரம் அடைந்த பிறகு, கடந்த 5 ஆண்டுகளில் மட்டும், உள்நாட்டு உற்பத்தி அதிகரித்தும், பணவீக்கம் கட்டுப்படுத்தப்பட்டும் வருகிறதுதமிழகத்துக்கு முழு ஒத்துழைப்பு

 

 கேள்வி உங்களுடைய 5 ஆண்டு பணியை எப்படி மதிப்பிடுகிறீர்கள் ? தேர்தலில் மீண்டும் நீங்கள் வெற்றி பெற்றால் நாட்டுக்கு நீங்கள் செய்யும் பணி என்ன குறிப்பாக தமிழகத்திற்கு என்ன செய்வீர்கள் ?

 

 பதில் கடந்த 2014-ம் ஆண்டு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டனமீதமுள்ளவை நிறைவேற்றப்பட்டுவிடும். நாட்டின்      பொருளாதார
வளர்ச்சியில் தமிழகம் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் சிறிது தொய்வு ஏற்பட்டாலும், தற்போது அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது. தமிழ்நாடு மேலும் வளர்ச்சியடைய நாங்கள், முழு ஒத்துழைப்பு வழங்குவோம்.

 

 கேள்வி :  ’பி.எம். நரேந்திர மோடி  வாழ்க்கை வரலாறு திரைப்படத்துக்கு தேர்தல் கமிஷன் தடை விதித்து இருப்பது குறித்து கருத்து என்ன ?

 

 பதில் : தேர்தல் கமிஷன் என்பது சுதந்திரமான அமைப்பு ஆகும். நான் பிரதமராக தற்போது பதவி வகித்து வரும் பட்சத்தில், இது குறித்து கருத்து கூற விரும்பவில்லை.

 

 ராணுவம்

 

 கேள்வி : பிரசார கூட்டங்களில் பாலகோட், புல்வாமா தாக்குதல் குறித்து பேசியதற்கு, உங்களிடம் தேர்தல் கமிஷன் விளக்கம் கேட்டு உள்ளதே ?

     

 பதில் : தேர்தல் கமிஷன் சுதந்திரமான அமைப்பு. இந்தியாவில் உள்ள அனைத்து எம்.பி.க்கள்., எம்.எல்.ஏக்கள், அரசியல் பிரமுகர்கள் இதன் கட்டுப்பாட்டில் அடங்குவர். பா...விடம் இது குறித்து விளக்கம் கேட்டால் அது பற்றி உரிய விளக்கம் அளிக்கப்படும். தேச நலனுக்காக உயிர் தியாகம் செய்தவர்களின் புகழை பேசக்கூடாது என தேர்தல் கமிஷனின் விதிகளில் உள்ளதா என்பது குறித்து எனக்கு தெரியாது.

 

 கேள்வி : பிரசார கூட்டங்களில் பிரதமர் ராணுவத்தையும், ராணுவ வீரர்களை பற்றியும் பேசி, அரசியலாக்குவதாக எதிர்க்கட்சியினர் புகார் தெரிவித்து வருகின்றனரே ?

 

 பதில் ராணுவத்தை பற்றி நான் பிரசாரங்களில் பேசுவதில்லையே. ராணுவ வீரர்களின் வீரத்தை பற்றித்தான் நான் பேசி வருகிறேன். விண்வெளியில் அரசு செய்த சாதனையை சொல்லக்கூடாதா? இதில் என்ன தவறு உள்ளது ?  பாலகோட் சம்பவம் நிகழாவிட்டால், எதிர்க்கட்சியினர் அதனை பற்றி விமர்சிக்காமல் இருப்பார்களா அபிநந்தன் திரும்பி வந்திருக்காவிட்டால், எதிர்க்கட்சியினர் என்னை சும்மா விட்டு விடுவார்களா அவருக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி கூட்டம் நடத்தவும் திட்டமிட்டு இருந்தார்கள். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

 

நீட் தேர்வு 

 கேள்வி : தமிழகத்தில் நதிநீர் பிரச்சினை, ’நீட் தேர்வு உள்ளிட்ட பிரச்சினைகள் உள்ளதே?

 

 பதில் : எனக்கு தமிழ்நாட்டின் பிரச்சினைகள் தெரியும். பா... தேர்தல் அறிக்கையில், தமிழக பிரச்சினைகளுக்கு தீர்வு கூறி உள்ளோம். எனக்கு தெரிந்தவரை தண்ணீர் பிரச்சினைதான் பிரதானமாக உள்ளது. மழை நீர் சேகரிப்பு, கடல் நீரை குடிநீராக்குவது, நதிநீர் இணைப்பு உள்ளிட்டவற்றிற்காக பட்ஜெட் கூடுதல் நிதி ஒதுக்கி, தனி அமைச்சகம் உருவாக்கி தீர்வு காண திட்டமிட்டு உள்ளோம்.

 

 கேள்வி காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் வறுமையை ஒழிப்போம் எனும் பெயரில் நியாய் என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் அளிக்கப்போவதாக கூறி உள்ளனர். இது பற்றி தங்களது கருத்து என்ன ?

 

 பதில் : நாட்டில் நடந்த 60 ஆண்டுகளாக வறுமை ஒழிக்கப்படவில்லை என்பதை அவர்களே ஒப்புக்கொண்டு உள்ளனர். நியாயத்தை பற்றி பேசுபவர்கள், எம்.ஜி.ஆர். அரசை கவிழ்த்தது. சீக்கிய படுகொலை ஆகியவற்றுக்கு என்ன பதில் கூறப்போகிறார்கள் இது போன்று பல கேள்விகளுக்கு அவர்கள் பதில் சொல்ல வேண்டி வரும்.

 

 காங்கிரசின் வாடிக்கை

 

 கேள்வி வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு பணம் பறிமாற்றம் செய்யப்படும் என்ற திட்டம் பற்றி ?

 

 பதில் காங்கிரஸ் அரசு செய்ததை சற்று பின்னோக்கி பாருங்கள். கடந்த 2008, 2009-ல் சுமார் 6 லட்சம் கோடி ரூபாய் விவசாய கடன்களை தள்ளுபடி செய்வதாக கூறினர். ஆனால் அவர்கள் தள்ளுபடி செய்தது வெறும் 52 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே.

 

 இது தவிர கர்நாடகம், மத்திய பிரதேசகம், பஞ்சாப், ராஜஸ்தான், சத்தீஷ்கார் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் ஆளுகிறது. அங்கு வேலைவாய்ப்புகளை வழங்குவோம் என உறுதி அளித்தனர். ஆனால் ஒரு பணி கூட அங்கு நடைபெறவில்லை. அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. கர்நாடகத்தில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்வோம் என அறிவித்தனர். ஆனால் அது பெயரளவிலேயே உள்ளது. தேர்தலுக்காக வாக்குறுதிகளை அள்ளி வழங்குவது காங்கிரஸ் கட்சியின் வாடிக்கை.

 

 கேள்வி அப்படியென்றால் ரூ.72 ஆயிரம் வழங்குவோம் என்ற திட்டத்தை காங்கிரஸ் நடைமுறைப்படுத்தாதா ?

 

 பதில் வாக்குறிகளை நிறைவேற்றுவார்களா என்பதை விட, காங்கிரஸ் கட்சியை புரிந்து கொள்ளுங்கள். அவர்களின் நடவடிக்கைகளை வைத்து அறிந்து கொள்ளுங்கள்.


 கருப்பு பணம்

 

 கேள்வி : கருப்பு பணத்தை மீட்போம் என்பது பா...வின் முழக்கமாக இருந்தது. நாட்டு மக்களின் வங்கி கணக்கில் தலா ரூ.15 லட்சம் செலுத்துவோம் என மோடி கூறிய பணம் எங்கே? என தற்போது எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புகின்றனர். உங்களின் பெரிய நோக்கம் வெற்றி அடையாததற்கு யார் காரணம் ?

 

 பதில் : கருப்பு பணம் மீட்பு விவகாரத்தில் உலக அளவிலான நாடுகளுடன் நாங்கள் ஒப்பந்தம் செய்து உள்ளோம். சுவிஸ் வங்கியுடன் கூட ஒப்பந்தம் செய்து உள்ளோம். அதன்படி, அந்த வங்கியில் யார் - யார் கணக்கு வைத்து உள்ளனர் எவ்வளவு பணம் டெபாசிட் செய்யப்படுகிறதுயார் - யார் டெபாசிட் செய்கின்றனர் என்ற விவரங்கள், 2019-ம் ஆண்டுக்கு பிறகு, கிடைத்துவிடும். கடந்த  முறை ஆட்சி அமைத்தவுடன் நாங்கள் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து நடவடிக்கைகளை தொடங்கினோம். காங்கிரஸ் ஆட்சியின் போது உச்சநீதிமன்றம், உத்தரவிட்டும் அவர்கள் குழு அமைக்கவில்லை.

 

 புல்வாமா தாக்குதல்

 

 கேள்வி : புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த விவகாரம் குறித்து பல்வேறு கேள்வி எழுந்து உள்ளது. அமெரிக்கா ஒசாமா பின்லேடனை சுட்டு வீழ்த்தி, சடலத்தை எடுத்து வந்தனர். இந்தியா ஏன் அது போல், பாகிஸ்தானில் உள்ள பயரங்கரவாதிகளை, குறிவைக்க இயலவில்லை என சிலர் சந்தேகம் எழுப்புகின்றனர். அது பற்றி தங்களது கருத்து ?

 

 பதில் : நடவடிக்கை எடுக்க யோசனை இது.

 

 கேள்வி : மத்திய அரசின் நலத்திட்டங்களால், தமிழ் நாட்டினர் எத்தகைய அளவு பயனடைந்து உள்ளனர் என்பது குறித்து தந்தி  குழுமம் சார்பில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. ஆதில் பசல் பீமா யோஜனா  அதாவது பயிர் காப்பீடு திட்டத்திற்கு பெரும்பாலானோர் வரவேற்பு தெரிவித்து உள்ளனர். அதே சமயம், இழப்பீடு கிடைக்க ஒரு வருடம் தாமதம் ஏற்படுவதாகவும் விவசாயிகள் புகார் தெரிவித்து உள்ளனர். இது குறித்து தங்களது விளக்கம் என்ன ?

 

 பதில் : காலதாமதம் ஏற்பட்டது உண்மைதான். பின்னர் அதற்கான காரணத்தை கண்டறிந்து அதனை சரி செய்து விட்டோம். அது மட்டுமல்லாமல் தாமதம் ஏற்பட்டால், அதற்குரிய தொகையை அபராதமாக வழங்கவும் உத்தரவிட்டு உள்ளோம். இதுபோல் தமிழகத்தில் மட்டும் ஐந்தாயிரம் கோடி ரூபாய், விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது. வளர்ச்சி எங்கு உள்ளதோ அங்கு நன்மையும் நிச்சயம் கிடைக்கும். இவ்வாறு மோடி கூறினார்.