பாஜக எம்.எல்.ஏக்கள் நியமனம் செல்லும்

பாஜக எம்.எல்.ஏக்கள் நியமனம் செல்லும்

பாஜகவை சேர்ந்த சாமிநாதன், சங்கர், செல்வ கணபதி  ஆகியோரை பாண்டிச்சேரி சட்டப்பேரவைக்கு நியமன எம்.எல்.ஏக்களாக நியமித்தது மத்திய அரசு. இதனை ஏற்றுக்கொள்ளாத பாண்டிசேரி அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.  மூன்று பேரை நியமித்தது செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 

இதனை எதிர்த்து பாண்டிச்சேரி அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் மூன்று பேரின் நியமனம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.