பாஜக போட்டியிடும் தொகுதிகளுக்கு தனித்தனி தேர்தல் அறிக்கை

பாஜக போட்டியிடும் தொகுதிகளுக்கு தனித்தனி தேர்தல் அறிக்கை

நாற்பதும் நமதே, நாடும் நமதே என்று பிரதமர் சொன்னதுபோல மிக வலிமையாக பணியாற்றி வருகிறோம். தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பாஜக கொடியேற்றப்பட்டு நிர்வாகிகளை சந்தித்துள்ளோம். தமிழகத்தின் வளர்ச்சிக்காக மிகப்பெரிய கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் பனைத் தொழில் என்பது ஊக்குவிக்கப்பட வேண்டிய ஒன்று. தமிழகத்தில் பாஜக போட்டியிடும் ஒவ்வொரு தொகுதிக்கும் தனித்தனியே தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட உள்ளது. அதில், பனைத் தொழில் ஊக்குவிப்பு பிரதான இடத்தைப் பிடிக்கும் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் வியாழக்கிழமை தூத்துக்குடியில் அவர் அளித்த பேட்டியில் கூறினார்.